இக்காலத்தில் வயதானவர்கள் சந்திக்கும் நோய் பாதிப்புகளை இளைய தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர்.மோசமான உணவுப்பழக்கங்கள் கொடிய நோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கின்றது.இதில் உயர் இரத்த அழுத்த நோய் பாதிப்பை சந்தித்து வருபவர்கள் சீரக தண்ணீர் குடித்து வந்தால் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டுவிடலாம்.
சீரக ஊட்டச்சத்துக்கள்:-
*பொட்டாசியம்
*இரும்பு
*கால்சியம்
*மெக்னீசியம்
*வைட்டமின்கள்
*தாதுக்கள்
உயர் இரத்தத்தை கண்ட்ரோல் செய்யும் சீரக நீர்:
தேவையான பொருட்கள்:-
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.அடுப்பில் பாத்திரம் வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைவான தீயில் வறுக்க வேண்டும்.
2.சீரகம் கருவிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிளாஸ் பசும் பாலை அதில் ஊற்றி குறைந்த தீயில் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
3.பால் நன்கு கொதித்து வந்ததும் ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – மூன்று தேக்கரண்டி
2)தண்ணீர் – இரண்டு லிட்டர்
செய்முறை விளக்கம்:-
1.அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று தேக்கரண்டி சீரகம் போட்டு வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.
2.பின்னர் அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை ஆறவைத்து வடித்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,இரத்த கொதிப்பு போன்ற பாதிப்புகள் குணமாகும்.
அதேபோல் தினமும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.சீரகத் தண்ணீரை தொடந்து பருகி வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும்.நீரிழிவு நோய்,இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க சீரக நீரை தொடர்ந்து பருகி வரலாம்.செரிமானப் பிரச்சனை இருபவர்கள் சீரக நீர் பருகி பலன் பெறலாம்.