Champions trophy 2025!! பாகிஸ்தானில் புறக்கணிக்கப்பட்ட இந்திய தேசிய கொடி!!

0
131
Champions trophy 2025!! Indian national flag ignored in Pakistan!!
Champions trophy 2025!! Indian national flag ignored in Pakistan!!

பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறக்கூடிய 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சூழல் இவ்வாறு இருக்க பிப்ரவரி 19 ஆகிய நாளை சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டி பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில் இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற அனைத்து நாடுகளின் தேசிய கொடிகளும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் பறக்க விடப்பட்டிருக்கிறது. இங்கு இந்திய தேசிய கொடி மட்டும் இடம்பெறவில்லை என்பது இந்திய ரசிகர்களை கோவத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபிக் ஆன அட்டவணைகள், விளையாடப் போகும் அணிகள், அரையிறுதிக்கான தேதிகள் இடம் போன்றவை முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்த போட்டிக்காக 8 அணிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த சாம்பியன்ஸ் டிராபியை காண அனைத்து நாடுகளிலும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கக்கூடிய இந்த தருணத்தில் பாகிஸ்தானின் உடைய இந்த நடவடிக்கையானது இந்திய ரசிகர்களின் உடைய வெறுப்பை மேலும் மேலும் சம்பாதிப்பதாக அமைந்திருக்கிறது.

Previous articleநான் விழுந்தால் என்னைத் தாங்க இவர் இருக்கிறார்!! நிகழ்ச்சி மேடையில் சைந்தவி!!
Next articleஒர்க் ப்ரம் ஹோம்!! ஒரு மாதத்தில் இல்லத்தரசிகளிடம் 50 லட்சத்துக்கு மேல் ஏமாற்றிய மோசடி கும்பல்!!