சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சினிமா ஒருபுறம் என்றும் தன்னுடைய உடல் மற்றும் மனநிலையை கவனிப்பதில் ஒருபுறம் என்றும் பயணித்து வரும் சூழலில் முன்மொழி கொள்கை குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்திருக்கும் பதிலானது ரசிகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது.
செய்தியாளர் சந்திப்பில் மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பதாவது :-
இந்த சமூகத்தில் எந்த மொழியை தவறாக பேசினாலும் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவோ அல்லது கிண்டல் செய்யவும் மாட்டார்கள் என தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஆங்கிலத்தை தவறாக பேசும் பொழுது இந்த சமூகத்தின் உடைய பார்வை நம் மீது விசித்திரமாக விழும் என தெரிவித்திருக்கிறார்.
இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டம் கணினி வளர்ச்சியில் முன்னேற்றம் அடையக்கூடிய காலகட்டமாக இருப்பதால் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக ஆங்கில மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், ஆங்கில மொழியை கற்றுக் கொண்டால் மட்டுமே தங்களுடைய வாழ்வில் முன்னேற முடியும் என தெரிவித்திருக்கிறார்.
தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது என்றும் தமிழை வளர்க்க வேண்டும் என்றால் தமிழனாக வளர வேண்டும் என தெரிவித்தவர் சுந்தர் பிச்சை மற்றும் அப்துல் கலாம் அவர்களால் தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை என தெரிவித்திருக்கிறார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க போராடி ஒரு நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அதாவது பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் இந்த மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வரக்கூடிய சூழலில் நடிகர் ரஜினிகாந்தினுடைய இந்த பதிலானது அனைவரையும் திரும்பிப் பார்க்கும்படி செய்து இருக்கிறது.