பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் உடைய வருகை பதிவு குறைவாக இருப்பதால் பல்கலைக்கழக தேர்வுகளை எழுத அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையினை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பதாவது :-
பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருப்பின் அவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் முறையான வருகை பதிவு வைத்திருக்கக்கூடிய மாணவர்களை கேள்விக்கு உள்ளாக்கி விடும் என்பதால் இதனை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறார்.
மேலும், நீதிமன்றங்கள் கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் மாணவர்களின் உடைய வருகை குறித்து அந்தந்த பல்கலைக்கழகங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.
மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் இதற்கான முடிவை பல்கலைக்கழகங்கள் தான் எடுக்க வேண்டும் என தெரிவித்திருப்பது மாணவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.