நம் வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருப்பதும் மோசமானதாக இருப்பதும் நாம் உட்கொள்ளும் உணவுமுறையை பொறுத்து உள்ளது.கடந்த காலங்களை போன்று தற்பொழுது ஆரோக்கிய உணவுமுறை பழக்கத்தை யாரும் பின்பற்றுவதில்லை.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கிய உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வந்தால் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் பணத்தின் பின்னால் ஓடும் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செல்லுவதில்லை.அனைத்திற்கும் நேரம் ஒதுக்கும் நாம் நமக்காக என்றும் நேரம் ஒதுக்குவதில்லை.இதனால் உடல் ஆரோக்கியம் சீக்கிரம் மோசமாகிவிடுகிறது.
எனவே இனியும் தாமதிக்காமல் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த தொடங்குங்கள்.நாம் சில ரூல்ஸை பின்பற்றினால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
1)இன்று பலருக்கும் இருக்கும் பழக்கம் உணவை வேகமாக உட்கொள்வது.சிலர் தாங்கள் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே உட்கொள்கின்றனர்.உணவு உட்கொள்ளும் பொழுது அதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.நன்றாக மென்று உணவை உட்கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் செரிமானப் பிரச்சனையில் இருந்து உடலை காத்துக் கொள்ளலாம்.
2)அளவிற்கு அதிகமாக உட்கொள்ளுதல் அல்லது அடிக்கடி உட்கொள்ளுதல் போன்ற பழக்கத்தை கைவிட வேண்டும்.
3)தினமும் உடற்பயிற்சி,யோகா,தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.வேலைப்பளு காரணமாக இதுபோன்ற நல்ல விஷயங்களை தவிர்க்க வேண்டாம்.
4)ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்க்க வேண்டும்.வேலை செய்யும் பொழுது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
5)சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.பழச்சாறு செய்து பருகுங்கள்.
6)தினமும் வேலை செய்யும் பொழுது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு ஆசனம் செய்யுங்கள்.அல்லது உடலுக்கு ஓய்வு கொடுக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.
7)உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பவர்கள் உணவுமுறையில் அக்கறை செலுத்த வேண்டும்,உடல் உழைப்பு இல்லமால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்ப்பதால் உண்ணும் உணவு செரிமானமாக தாமதம் ஆகும்.இதனால் செரிமானப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
8)உடல் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தேவையான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
9)தினமும் 8 முதல் 10 மணி நேர உறக்கம் அவசியமான ஒன்றாகும்.தூக்கமின்மை பிரச்சனை,நேரம் கழித்து தூங்குதல் போன்றவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.
10)உரிய நேரத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.காலை,மதியம் மற்றும் இரவு உணவை எப்பொழுதும் நேரமாக உட்கொள்ள வேண்டும்.உடல் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்தினால் நோய் நொடியின்றி வாழலாம்.

