மத்திய அரசினுடைய பவர்க்ரிட் நிறுவனத்தில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 115 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ Manager (Electrical)
இந்த பிரிவில் 9 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.80,000 – ரூ.2,20,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
21 வயது நிறைவடைந்த மற்றும் B.E./ B.Tech/ B.Sc (Engg.) போன்ற பட்டங்களை பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ Dy. Manager (Electrical)
இந்த பிரிவில் 48 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணியில் சேரக்கூடியவர்களுக்கு ரூ.70,000 – ரூ.2,00,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் அதே கல்வி தகுதி மற்றும் அதே வயது வரம்பு குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
✓ Asstt. Manager (Electrical)
இந்த பணியில் மொத்தம் 58 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணியில் சேரக்கூடியவர்களுக்கு ரூ.60,000 – ரூ.1,80,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் மேற்கூறப்பட்ட பட்டப்படிப்புகள் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திரையிடல் சோதனை, ஆவண சரிபார்ப்பு, தனிப்பட்ட நேர்காணல் போன்றவற்றின் மூலம் இந்த காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் சேர நினைப்பவர்கள் www.powergrid.in என்ற இணையதள பக்கத்தில் மார்ச் மாதம் 12 ஆம் தேதிக்குள் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.