மாதுளம் பழம் சாப்பிடும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இவை!!

Photo of author

By Divya

மாதுளம் பழம் சாப்பிடும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இவை!!

Divya

தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்.மாதுளம் பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.இதன் காரணமாகவே மாதுளம் பழம் சூப்பர் புட் என்று அழைக்கப்படுகிறது.
மாதுளம் பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது.இது இதய ஆரோக்கியத்தை பாதிக்க பலப்படுத்த உதவுகிறது.மாதுளம் பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.கர்ப்பிணி பெண்கள் மாதுளம் பழத்தை சாப்பிட மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாதுளை ஊட்டச்சத்துக்கள்:
1)பொட்டாசியம்
2)வைட்டமின்கள்
3)நார்ச்சத்து
4)தாதுக்கள்
5)ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
6)புரதம்
7)மெக்னீசியம்
8)போலிக் அமிலம்
மாதுளை பயன்கள்:
*உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
*மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.இரத்த சோகை பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.
*சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
*உடலில் சகிப்புத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது.வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
*நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.இரத்த விருத்தியை அதிகரிக்க உதவுகிறது.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற உதவுகிறது.
*சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக மாதுளம் பழம் உட்கொள்ளலாம்.
மாதுளம் பழத்தை தவிர்க்க வேண்டியவர்கள்:
**மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் மாதுளம் பழத்தை தவிர்க்க வேண்டும்.இருமல்,காய்ச்சல் இருப்பவர்கள் மாதுளம் பழத்தை தவிர்க்க வேண்டும்.
**வாயுத் தொல்லை இருப்பவர்கள் மாதுளம் பழத்தை தவிர்க்க வேண்டும்.ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் மாதுளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மாதுளம் பழம் சாப்பிடும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
1.மாதுளம் பழத்தை கட் செய்வதற்கு முன் அதை குளிர்ந்த நீரில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.மாதுளை தோலில் இரசாயனங்கள் படிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
2.சிலர் மாதுளை விதையுடன் உள்ள வெள்ளை சதை பகுதி உவர்ப்பு தன்மை கொண்டவையாக இருக்கும்.இதை அகற்றிவிட்டு விதைகளை மட்டும் தான் நாம் உட்கொள்கிறோம்.ஆனால் இந்த வெள்ளை சதைப்பற்றை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.
3.மாதுளம் பழத்தை நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்த விரும்புபவர்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.