இன்றைய காலத்தில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.நன்றாக இருப்பது போன்று தோன்றும் திடீரென்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவு உண்டாகிவிடும்.உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மிகவும் முக்கியம்.ஆனால் இன்று நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் ஆரோக்கியத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடவேண்டும் போல.
தற்பொழுது யாரும் உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளவில்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.வாய் ருசிக்காக மட்டுமே உணவை தேடி உண்கின்றோம்.கண்ட நேரத்தில் உட்கொள்ளவது,ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் நாமே நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்து கொடுத்துகின்றோம்.குழந்தைகளுக்கு புத்திமதி சொல்லவேண்டிய பெரியவர்களே ஆரோக்கியம் இல்லாத உணவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர்.
குழந்தைகளுக்கு சத்தான உணவை செய்து கொடுக்க நேரம் இல்லை என்று சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருக்கும் பெரியவர்கள் இனியாவது தங்களை திருத்தி கொள்ள வேண்டும்.நாம் என்ன மாதிரியான உணவை எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியத்தின் நிலை இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
தற்பொழுது உணவுமுறை பழக்கம் நவீனமாகிவிட்டது.இதனால் நவீன நோய் பாதிப்புகளுக்கு எளிதில் நம்மை எளிதில் தொற்றிக் கொள்கிறது.உணவை விட நாம் உட்கொள்ளும் தின்பண்டங்களால் தான் அதிக நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.இப்படி நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுமுறை பழக்கம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1)சிப்ஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் தின்பண்டங்களில் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ்.எண்ணையில் பொரித்தெடுக்கப்டும் இந்த பொருள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறது.சிப்ஸில் சுவைக்காக மசாலா மற்றும் கெமிக்கல் கலக்கப்படுகிறது.இது செரிமானப் பிரச்சனை,கொலஸ்ட்ரால்,வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை உருவாக்கிவிடும்.
2)கோக் போன்ற சோடா பானங்கள்
உடல் சூட்டை தணிக்கவும் ஆசைக்காகவும் பாட்டில்,டின் போன்றவற்றில் அடைத்து விற்கப்படும் கோக் போன்ற பானங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது.இந்த பானங்களில் தண்ணீரை தவிர அதிக இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.இது உணவுக்குழாய் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
3)பழசாறு பானம்
மாம்பழம்,ஆரஞ்சு போன்ற பிளேவரில் கிடைக்கும் குளிர் பானங்களில் இரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்படுகிறது.
4)நூடுல்ஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு நூடுல்ஸ்.இந்த நூடுல்ஸ் மைதாக்களால் செய்யப்படக் கூடியவை.நூடுல்ஸ் கெடாமல் இருக்க அதிக கெமிக்கல் கலக்கப்படுகிறது.இந்த வகை உணவுகள் சிறுநீரக நோய் பாதிப்பை உண்டு பண்ணக் கூடியது.
5)பாக்கெட் சூப்
கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ரெடிமேட் சூப் வகைகளை மக்கள் வாங்கி சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் தன்மை கொண்டது.
6)பாக்கெட் உணவுகள்
சமைத்து உட்கொள்ள நேரம் இல்லாதவர்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தபட்ட உணவை வாங்கி சுடுநீர் கலந்து சாப்பிடுகின்றனர்.இது நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
7)எண்ணையில் பொரித்த தின்பண்டம்
பெரும்பாலான தின்பண்டங்கள் எண்ணெயில் பொரித்ததாக தான் இருக்கிறது.கடைகளில் விற்கப்படும் இதுபோன்ற தின்பண்டங்கள் பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்படுகிறது.இதை வாங்கி உட்கொண்டால் நம் குடல் ஆரோக்கிய முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும்.