மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கிய கல்வி உதவித் தொகையை வழங்குமாறு அரசியல் கட்சிகள் முதலமைச்சர் என அனைவரும் ஒருபுறம் கோரிக்கை விடுக்க மற்றொருபுறம் மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு தமிழகத்திலிருந்து அரசியல் கட்சிகள் உட்பட அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை திருச்சி மதுரை கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்பொழுது ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய திமுக அரசும் மத்திய கல்வி அமைச்சர் கூறியது மற்றும் ரூ.1152 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்வதால் தமிழகத்திற்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது என்றும் மும்மொழி கொள்கையை மறுக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது பெயரில் நடத்தக்கூடிய பள்ளிகளில் மும்மூலிகளை நடத்தக்கூடிய பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுகின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார்.
இதுபோன்று ஒருவரை ஒருவர் கேள்வி கேட்பதும் பதில் அளிப்பதும் என சென்று கொண்டிருக்க கூடிய சூழலில், மாணவர்களை தொடர்ந்து கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து அதன்படி கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்று ஆசிரியர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என சா.அருணன் தெரிவித்திருக்கிறார்.