ஸ்மார்ட் போன் பயனர்களே உஷார்!! டவுன்லோட் செய்யும் ஆப்களால் வரும் ஆபத்துகள்!!

Photo of author

By Gayathri

ஸ்மார்ட் போன் பயனர்களே உஷார்!! டவுன்லோட் செய்யும் ஆப்களால் வரும் ஆபத்துகள்!!

Gayathri

Smart phone users beware!! Dangers of downloading apps!!

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் டிக் டாக், ஷேர் இட் போன்ற செயலிகளுக்கு தரவு பாதுகாப்பின்மை காரணமாக அரசு தடை விதித்திருந்தது. அதனைத் தொடர்ந்தும் பல செயலிகளுக்கு தர மற்றும் தரவு அடிப்படையில் அரசு தடை விதித்து வருகின்றது. சமீபத்தில் கண்காணிப்பு தளமான லூமென் தரவு தளம் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ்களின் நம்பகத்தன்மை இல்லாத ஆப்ஸ்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்த தரவு தளம் அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றது. இது சமீபத்தில் 119 செயலிகள் நம்பகத்தன்மை அற்றது என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த செயலிகள் நம்பகத்தன்மையற்றது என்று கூகுள் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. அதை தற்சமயம் தடை செய்துள்ளது. இந்த செயலிகள் பெரும்பாலும் சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்தது எனவும், ஒரு சில செயலிகள் அமெரிக்கா, பிரிட்டன் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளைச் சார்ந்தவை என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் போன் பயனீர்களே! தங்கள் சொந்த தரவுகளை அதிகமாக பதிவு செய்யும் நம் போன்களின் தேவையில்லாத ஆப்ஸ்களை டவுன்லோட் செய்வது குறித்து விழிப்புணர்வாக செயல்படுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து ஆப்ஸ்களின் பட்டியலை அரசு வெளிப்படையாக வெளியிடவில்லை. எனினும், ஒழுங்குமுறை நடவடிக்கையை அடிமுறையாக கொண்டும், அரசு நடவடிக்கைகளுக்கு மீறியதாக இருக்கும் தரவுகளைக் கொண்டுள்ள 119 ஆப்ஸ்கள் தொழில்நுட்ப சட்டத்தின் 69 ஏ அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.