இதுவரை தமிழகத்திற்கு 1152 கோடி கல்வி நிதி உதவி வரவில்லை என தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் முன்னோடி கொள்கையை எதிர்த்து போராடி வரக்கூடிய சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் இதனால் தமிழகத்திற்கு 5000 கோடி இழப்பு என தெரிவிப்பது தமிழகத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பதாவது :-
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதால் தமிழகத்திற்கு என்ன பிரச்சனை என்பது விளங்கவில்லை என்றும் கல்விக் கொள்கையை வைத்து தமிழக அரசு அரசியல் புரிவதாகவும் குற்றம் சாட்டிய மத்திய கல்வி அமைச்சர் தமிழக அரசின் உடைய பார்வையில் தான் குறைபாடு இருக்கிறது என்றும் மாணவர்களின் உடைய எதிர்கால நலனோடு தமிழக அரசு விளையாட வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழியை உலகெங்கும் பறைசாற்றி வருவதாகவும் உலக தரத்தில் இந்திய மாணவர்களின் உடைய தரத்தை உயர்த்துவதற்காக தான் இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்திருக்கிறார் என்றும் தெரிவித்த அவர் எந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக பி எம் ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பதால் தமிழகத்திற்கு 1152 கோடி மட்டுமல்லாது 5000 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு இலக்க நேரிட்டிருக்கிறது என்று தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.