வளர்ந்த உள்நாக்கை சுருங்க வைக்கும் பாட்டி வைத்தியம்!! இந்த உருண்டையை தொண்டையில் படும்படி வைங்க போதும்!!

Photo of author

By Divya

வளர்ந்த உள்நாக்கை சுருங்க வைக்கும் பாட்டி வைத்தியம்!! இந்த உருண்டையை தொண்டையில் படும்படி வைங்க போதும்!!

Divya

நமது தொண்டை பகுதியில் உள்ள உறுப்பான உள்நாக்கு வளர்ச்சி அடைந்தால் இருமல்,தொண்டை வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இந்த உள்நாக்கின் வளர்ச்சியை குறைக்க இங்கு தரப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவைப்படும் பொருட்கள் பட்டியல்:

1.பழுத்த பேரிச்சம் பழம் – ஒன்று

2.புளி – அரை நெல்லி அளவு

3.கல் உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:

படி 01:

முதலில் நன்றாக பழுத்த பேரிச்சம் பழம் ஒன்றை விதை நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேரிச்சம் பழத்தை உரலில் போட்டு லேசாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

படி 02:

பிறகு அரை நெல்லிக்காய் அளவு புளி எடுத்து பேரிச்சம் பழத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

படி 03:

பிறகு அதில் சிறிதளவு கல் உப்பு பொடித்து சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பின்னர் ஒரு சிறிய மர குச்சி எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

படி 04:

பிறகு தயாரித்து வைத்துள்ள புளி பேரிச்சம் பழ கலவையை அந்த குச்சியின் முனையில் உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.குச்சி வெளியில் தெரியாத அளவிற்கு இந்த கலவையை பிடித்துக் கொள்ள வேண்டும்.

படி 05:

பிறகு இந்த கலவையை உள் நாக்கில் படும் படி வைக்க வேண்டும்.இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உள்நாக்கு சிறியதாகிவிடும்.

உள்நாக்கு வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மற்றொரு தீர்வு:

தேவைப்படும் பொருட்கள் பட்டியல் இதோ:

1.வில்வ இலை சாறு – 25 மில்லி

2.துளசி இலை சாறு – 25 மில்லி

3.நல்லெண்ணெய் – 125 மில்லி

செய்முறை விளக்கம்:

படி 01;

முதலில் இரண்டு தேக்கரண்டி துளசி இலைகளை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

படி 02:

அடுத்து இரண்டு வில்வ இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இப்பொழுது இந்த துளசி மற்றும் வில்வ இலைகளை கல்வத்தில் தனி தனியாக போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

படி 03:

அதன் பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 125 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.எண்ணெய் சூடானதும் அரைத்த துளசி இலை சாறு மற்றும் வில்வ இலை சாறு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

படி 04:

எண்ணெய் கொதித்து சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தைலத்தை ஆறவைக்க வேண்டும்.பிறகு இந்த தைலம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வாயில் ஊற்றி தொண்டையில் படும்படி நன்கு கொப்பளித்து துப்ப வேண்டும்.இப்படி செய்தால் உள்நாக்கு வளர்ச்சி குறையும்.

தேவைப்படும் பொருட்கள் பட்டியல்:

1.தண்ணீர் – ஒரு கிளாஸ்

2.கல் உப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

படி 01:

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

படி 02:

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு கல் உப்பு பானத்தை வெது வெதுப்பான சூடு வரும் வரை ஆறவைக்க வேண்டும்.

படி 03:

பின்னர் இந்த தண்ணீரை கொண்டு தொண்டையில் படும்படி வாய் கொப்பளித்தால் உள்நாக்கு வளர்ச்சி குறையும்.