தற்பொழுது யாரும் ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதில்லை.ஜங்க் புட்,பாஸ்ட்புட் என்று கண்ட உணவுகளை சாப்பிட்டு குடல் ஆரோக்கியம் பாதிக்க நாமே காரணமாகிவிடுகின்றோம்.நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி மற்ற உறுப்புகளுக்கு வழங்கும் வேலையை குடல் செய்கிறது.
அப்படி இருக்கையில் குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும் உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கேள்விக் குறியாகிவிடும்.குடலில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் தேங்கினால் நாம் பல்வேறு பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.
வயிற்று வலி,வாய் துர்நாற்றம்,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு ஏற்படும்.எனவே குடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற சுகபேதி முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
சுகபேதி மருந்து தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர் – 2 லிட்டர்
2)கல் உப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன்
3)எலுமிச்சம் பழம் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து இரண்டு லிட்டர் அளவு நல்ல தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.
ஸ்டெப் 02:
இந்த தண்ணீரில் இரண்டு டேபுள் ஸ்பூன் அளவு கல் உப்பு சேர்த்து கரண்டி கொண்டு நன்றாக கலக்கிவிட வேண்டும்.20 முதல் 25 நிமிடம் வரை தண்ணீரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டெப் 03:
இரண்டு லிட்டர் தண்ணீர் சுண்டி முக்கால் லிட்டராக வரும் அளவிற்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
ஸ்டெப் 05:
பிறகு இந்த கல் உப்பு தண்ணீரை ஒரு தட்டு போட்டு மூடிவிட வேண்டும்.இந்த செயல்முறையை இரவு நேரத்தில் தான் மேற்கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 06:
மறுநாள் காலையில் எழுந்ததும் இந்த கல் உப்பு தண்ணீரை மீண்டும் அடுப்பில் வைத்து வெது வெதுப்பான சூடு வரும் வரை சூடாக்கி கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 07:
பிறகு இந்த நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்து கலக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
முக்கால் லிட்டர் தண்ணீரை இரண்டு அல்லது மூன்று முறையாக பிரித்துக் குடிக்கலாம்.இப்படி செய்தால் குடலில் தேங்கிய மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறி குடல் சுத்தமாகும்.பேதி மாத்திரை மற்றும் பேதி மருந்திற்கு பதில் இந்த இயற்கை சுகபேதி முறையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.