நோட் பண்ணுங்க.. உடலில் பிளட் சுகர் லெவல் திடீரென்று எகிற இந்த உணவுகள் காரணமாக இருக்கலாம்!!

Photo of author

By Divya

நோட் பண்ணுங்க.. உடலில் பிளட் சுகர் லெவல் திடீரென்று எகிற இந்த உணவுகள் காரணமாக இருக்கலாம்!!

Divya

இரத்த சர்க்கரை நோய் அதாவது நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பலரும் பாடாய் படுகின்றனர்.சர்க்கரை நோய்க்கு முதல் காரணம் உணவுமுறை பழக்கம்.சர்க்கரை நோயாளிகள் எந்த உணவு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தங்களை அறையாமல் உட்கொள்ளும் உணவால் சிலருக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.அப்படி சர்க்கரை அளவை உயர்த்தக் கூடிய ஆபத்தான உணவுமுறை பழக்கம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பிஸ்கட்ஸ் மற்றும் இனிப்பு பண்டங்கள்:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்ஸ்,சிப்ஸ்,பாக்கெட் தின்பண்டங்களில் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது.இதை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியம் கடுமையான விளைவுகளை சந்திக்கிறது.

எண்ணெய் உணவுகள்:

கோதுமை,மைதா போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பூரி,பரோட்டா போன்றவற்றை அதிகளவு உட்கொண்டல் இரத்த சர்க்கரை அளவு கூடும்.

அரிசி சாதம்:

தென் இந்தியர்கள் அதிகம் சாப்பிடும் உணவு அரிசி சாதம்.இதில் கார்போ ஹைட்ரேட் அதிகளவு நிறைந்திருக்கிறது.சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசி உணவை எடுத்துக் கொண்டால் உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.சாதாரண அரிசியை விட பழுப்பு அரிசி உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

பருப்பு + நெய்:

சிலருக்கு பருப்பு உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும்.இப்படி பருப்பில் நெய் ஊற்றி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு எளிதில் உயர்ந்துவிடும்.

தேநீர்:

நாம் அதிகளவு தேநீர் எடுத்துக் கொண்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.மாம்பழம்,வாழைப்பழம் போன்றவை சர்க்கரை அளவு அதிகரிக்க காரணமாகிவிடும்.

உருளைக்கிழங்கு உணவு:

நாம் உருளைக்கிழங்கு உணவை அதிகமாக எடுத்துக் கொண்டால் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் உணவுகள்:

*பாகற்காய் *கோவைக்காய் * கொத்து அவரை *சுரைக்காய் *நாவல் பழம் மற்றும் விதை *வெண்டைக்காய் *தயிர்

இதுபோன்ற உணவுகள் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.