ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அவரவருடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக புதிய தொழில் தொடங்குவதற்கான வழிவகைகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக தமிழக அரசு அமைத்துக் கொடுத்து வருகிறது.
மேலும் இந்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமானது அனைத்து மாவட்டங்களிலும் ஃபில்டர் காபி நிலையங்கள் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவியை பெற்று ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி, இதில் பயனடைய நினைப்பவர்களுக்கு காலியான இடமோ அல்லது கடையமைப்பதற்கு ஏதுவான வகையில் கட்டிடங்களோ இருக்கும் பட்சத்தில் பில்டர் காபி நிலையம் அமைக்கவும், அவ்வாறு பில்டர் காபி நிலையங்களை அமைப்பதற்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பில்டர் காபி நிலையங்களுக்கு அரசு வழங்கும் மானிய விவரங்கள் :-
✓ ரூ. 2 லட்சம் ரூபாய் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ விற்பனைக்கு வாங்கக்கூடிய பொருட்களுக்கு 5% வரை தள்ளுபடி
✓ மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு போன்றவை வழங்கப்படுகிறது.
✓ தொழில் தொடங்க தேவையான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு கூட இலவச ஆலோசனைகள் அந்தந்த நிறுவனங்களின் மூலம் பெற்று தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :-
✓ வயதுவரம்பு 18 முதல் 40 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவியை பெறலாம் என்றும் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ www.tahdco.com என்ற இணையதளத்தை விண்ணப்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
✓ 6.50 லட்சம் ரூபாய் முதல் 7.50 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்திற்கான தொகையாகவும் இதிலிருந்து 30 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் 2.25 லட்சம் ரூபாய் மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ பழங்குடியினருக்கு இதிலிருந்து 50% அல்லது 3.75 லட்சம் வரை மானியமாக விடுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.