நீரிழிவு நோய் என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாக இருந்து வருகிறது.உலக நோய் பட்டியலில் டாப் இடத்தில் இந்த நீரிழிவு நோய் அங்கம் வகிக்கிறது.நீரிழிவு நோயாளிகள் தரவரிசை பட்டியலில் நமது இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.முன்பு 40 வயதை கடந்தவர்கள் தான் பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிப்பு பிரச்சனையால் அவதியடைந்து வந்தனர்.
ஆனால் தற்பொழுது பிறக்கும் குழந்தைக்கு கூட சர்க்கரை வியாதி இருப்பது வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.நீரழிவு நோய் பாதிப்பு வந்துவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் நம்மை தொற்றிக் கொள்ளும்.மருந்து மாத்திரை கொண்டு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள முடியாது.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீரிழிவு நோய் பாதிப்பை விட தற்பொழுது நான்கு மடங்கு அதன் வீரியம் அதிகரித்துவிட்டது.உலகளவில் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் தெரிய வந்திருக்கிறது.
நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்:
1)இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல்
2)இன்சுலின் உற்பத்தி குறைதல்
3)மோசமான உணவுமுறை
4)பரம்பரைத் தன்மை
நீரிழிவு நோய் வகை:
1)டைப் 1 நீரிழிவு நோய்
2)டைப் 2 நீரிழிவு நோய்
3)கர்ப்பகால நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் அறிகுறிகள்:
*வழக்கத்தை காட்டிலும் அதிகளவு சிறுநீர் கழித்தல்
*இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை
*உடல் எடை குறைவு
*அடிக்கடி வாய்ப்புண் வருதல்
*வழக்கத்தைவிட அதிக உடல் சோர்வு
*கண் பார்வை மங்குதல்
*காயங்கள் குணமாக தாமதமாதல்
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்க செய்ய வேண்டியவை:
மூன்று மாத சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.இது ஏ1சி பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது.இதில் சர்க்கரை அளவு ஏழு சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.
அடுத்து பிளட் பிரஷர் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.இந்த மூன்றையும் சரியாக பராமரித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பொதுவாக நீரிழிவு பாதிப்பு இருப்பவர்களுக்கு உணவு உட்கொள்ளாத நேரத்தில் சர்க்கரை அளவு 80 முதல் 130க்குள் இருக்க வேண்டும்.உணவு எடுத்துக் கொண்ட பின் சர்க்கரை அளவு 180க்குள் இருக்க வேண்டும்.
அடுத்து பிளட் பிரஷர் 140/90 ஆக இருக்க வேண்டும்.பிறகு எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு 70க்கு கீழ் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.நல்ல கொலஸ்ட்ரால் அளவு 40க்கும் மேல் இருக்க வேண்டும்.இந்த அளவில் சர்க்கரை,பிளட் பிரஷர்,கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நீரிழிவு நோய் அபாயம் ஏற்படாது.