நமது வாயில் சுரக்கும் உமிழ்நீர் உற்பத்தி குறையும் பொழுது வாய் வறட்சி ஏற்படும்.இந்த வாய் வறட்சியை ஜெரோஸ்டோமியா என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.உமிழ்நீரானது நமது வாய் மற்றும் தொண்டை பகுதியில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளால் சுரக்கப்படுகிறது.
நாம் உட்கொள்ளும் உணவு நன்றாக அரைப்பட உமிழ்நீர் அவசியமான ஒன்று.உமிழ்நீர் உற்பத்தி குறைந்தால் வாயில் போடும் உணவை சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும்.உணவை அரைக்க போதிய உமிழ்நீர் இல்லையென்றால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.அது மட்டுமின்று உமிழ்நீர் உற்பத்தி குறைந்தால் வாய் உலர்ந்து போகும்.
உமிழ்நீர் சுரப்பு சரியான அளவில் இருந்தால் தான் வாய் மற்றும் தொண்டை ஈரப்பதமாக இருக்கும்.உணவு மெல்லுதல் மற்றும் விழுங்குதல் செயல்முறை சரியாக இருக்கும்.
உமிழ்நீர் உற்பத்தி குறைவு காரணமாக வாய் உலர்ந்து போவதால் நமக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
வாய் உலர்தல் அறிகுறி:
1)நாக்கு வறண்டு போதல்
2)உதடுகளில் வெடிப்பு ஏற்படுதல்
3)வாய் துர்நாற்றம்
4)பல் சொத்தை
5)உணவு விழுங்குவதில் சிரமம்
6)பேசுவதில் சிரமம் ஏற்படுதல்
7)வாய்ப்புண்
8)ஈறுகளின் இரத்த கசிவு
வாய் உலர்ந்து போக காரணங்கள்:
1)நீர்ச்சத்து குறைபாடு
2)மன அழுத்தம்
3)குறட்டை விடுதல்
4)மது பழக்கம்
5)அதிகளவு குளிர்பானங்கள் பருகுதல்
6)வயது முதுமை
7)பதட்டம்
8)புகையிலை பயன்பாடு
வாய் உலர்ந்து போவதால் ஏற்படும் பாதிப்புகள்:
1)பக்கவாதம்
2)அல்சைமர்
3)நீரிழிவு நோய் பாதிப்பு
4)முடக்கு வாதம்
5)நரம்பு சேதம்
6)பசியின்மை
வாய் உலர்ந்து போகாமல் இருக்க செய்ய வேண்டியவை:
*உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.இதற்கான சர்க்கரை நிறைந்த பானங்கள் பருகக் கூடாது.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகினாலே வாய் உலர்ந்து போகாமல் இருக்கும்.
*புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.வாய் வழியாக சுவாசிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
*சிட்ரஸ் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அதிக காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
*மதுபழக்கத்தை கைவிட வேண்டும்.உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க மாய்ஸ்ரைசர் பயன்படுத்தலாம்.