வாய்ப்புண் குடல்புண் பிரச்சனைக்கான காரணங்களும் அதற்கான தகுந்த தீர்வுகளும் இதோ!!

Photo of author

By Divya

வாய்ப்புண் குடல்புண் பிரச்சனைக்கான காரணங்களும் அதற்கான தகுந்த தீர்வுகளும் இதோ!!

Divya

நாம் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள தவறும் பொழுது உடல் ஆரோக்கியம் மோசமான பாதிப்பை சந்திக்கிறது.உணவை தவிர்ப்பதால் குடல் மற்றும் வாய் பகுதியில் புண்கள் உருவாகிவிடுகிறது.இதை அல்சர் பாதிப்பு என்று அழைக்கின்றோம்.

இது தவிர உணவு உட்கொள்ளாமல் இருந்தால் இரைப்பையில் புண்கள் ஏற்படும்.அல்சர் பாதிப்பில் குடல் அல்சர்,வாய் அல்சர்,சிறுகுடல் அல்சர்,கணைய அல்சர்,கார்னியா அல்சர்,நரம்பு அல்சர் என்று பல வகை இருக்கிறது.

இதில் குடல் மற்றும் வாய் பகுதியில் ஏற்படும் அல்சர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.குடல் பகுதியில் எரிச்சல் உணர்வு,நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை குடல் அல்சர் இருப்பதை உணர்த்துகிறது.

குடல் அல்சருக்கான அறிகுறிகள்:

1)வயிறு எரிச்சல்
2)எடை இழப்பு
3)நெஞ்செரிச்சல்
4)அடிக்கடி ஏப்பம்
5)வயிற்று வலி
6)குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு

வாய் அல்சருக்கான அறிகுறிகள்:

1)உதட்டில் கொப்பளம் தென்படுதல்
2)நாக்கில் சிவப்பு புண்கள் தென்படுதல்
3)ஈறுகளின் உட்புறத்தில் புண்கள் தோன்றுதல்
4)வாய் எரிச்சல்

குடல் மற்றும் வாய்ப்புண் ஏற்பட காரணங்கள்:

*உணவு தவிர்த்தல்
*மன அழுத்தம்
*மோசமான உணவுகள்
*காரமான உணவுகள்
*வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று
*மருந்து பக்க விளைவுகள்

வாய்ப்புண் குடல் புண் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை:

*காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

*சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.மது மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டும்.

குடல் புண் மற்றும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்:

சீரகம்
கொத்தமல்லி

இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் நாள் முழுவதும் ஊறவைத்து பருகினால் வாய் மற்றும் குடல் புண் குணமாகும்.

சீரகம்
மஞ்சள் துண்டு
மலை தேன்

ஒரு துண்டு குழம்பு மஞ்சள் கிழங்கு எடுத்து விளக்கு தீயில் வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.பபிறகு இதை கல்வத்தில் போட்டு பவுடர் பதத்திற்கு இடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்றாக இடித்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் ஒரு தேக்கரண்டி மலைத் தேன் சேர்த்து நன்றாக குழைத்து சாப்பிட்டால் குடல் புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகி வந்தால் அல்சர் புண்கள் ஆறும்.