NTA தகவலின் படி , JEE main இரண்டாம் அமர்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க ஆகும் கட்டண முறை என அனைத்தும் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் இரண்டாம் அமர்வுகளாக நடத்தப்படும் இந்த JEE தேர்வானது முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் வெற்றியடைவதன் மூலம் மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகள் மற்றும் IT, IIT, IIIT போன்ற படிப்புகளில் சேர முடியுமா என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
JEE தேர்வுகள் என்னுடைய முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு இரண்டையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி நாள் என்றும் அன்று இரவு 9 மணி வரை https://jeemain.nta.nic.in/இன்றைய இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவிடலாம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 13 மொழிகளில் நடத்தப்படும் JEE MAIN தேர்வானது இந்தியாவில் உள்ள NIT களில் இந்த ஆண்டு 24,000 இடங்களை ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடங்களுக்கு தேர்வாக நினைக்கும் மாணவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று தங்களுடைய பெயர் புகைப்படம் மற்றும் கையெழுத்து உட்பட்ட விவரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கும் படியும் மேலும் இதற்கான முழு விவரங்களை அறிய அதே இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.