நாம் உயிர் வாழ முக்கியமான ஒன்று தண்ணீர்.அப்படி அடிப்படை ஆகாரமாக திகழும் தண்ணீர் தற்பொழுது சுத்தமானதாக இல்லை என்பது நிதர்சனமான உண்மை.நாம் பருகும் தண்ணீரால் தான் நமக்கு பல வியாதிகள் வருகிறது.
உயிர்வாழ அடிப்படையாக திகழும் தண்ணீரே தற்பொழுது உயிரை பறிக்கும் எமனாக மாறிவருவது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.நாம் பயன்படுத்தும் தண்ணீரில் இரசாயனங்கள் அதிகளவு கலப்படுகிறது.சிலர் லாப நோக்கத்திற்காக தண்ணீரில் கூட கலப்படம் செய்கின்றனர்.
நகர்புறங்களில் மக்கள் பயன்பாட்டில் இருப்பது கேன் வாட்டர் தான்.தற்பொழுது கேன் வாட்டர் ATM வசதி இருக்கிறது.கேன் வாட்டர் சுத்தமானது என்று பெரும்பாலான மக்கள் அதையே வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால் உண்மையில் தற்பொழுது கேன் வாட்டரால் தான் உடல் நலக் கோளாறு அதிகளவு ஏற்படுகிறது.
RO என்று சொல்லப்படும் வாட்டரை பருகினால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பே எச்சரிக்கைவிடுத்திருக்கிறது.குழாய் நீரைவிட RO வாட்டர் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.RO வாட்டரில் உள்ள அசுத்தங்களை நீக்க சில விஷயங்கள் செய்யப்படுகிறது.இதனால் தண்ணீரில் இருக்கின்ற கால்சியம்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்களும் நீங்கிவிடுகிறது.இந்த செயல்களால் தண்ணீரின் இயற்கை சத்து குறைந்து அவை எந்த பயனும் இல்லாத ஒன்றாக மாறிவிடுகிறது.சிலர் RO வாட்டர் என்ற பெயரில் குழாய் தண்ணீரை நிரப்பி விற்று காசு பார்த்து வருகின்றனர்.
தொடர்ந்து RO வாட்டரை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்:
1)உடல்’சோர்வு
2)மாரடைப்பு
3)உடல் பலவீனம்
4)தசைப்பிடிப்பு
5)இருதயக் கோளாறு
6)கால்சியம் பற்றாக்குறை
சுத்தம் இல்லாத தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:
**உயர் இரத்த அழுத்தம்
**மஞ்சள் காமாலை
**இரைப்பை அலர்ஜி
**இரத்த சோகை
**எலும்பு முறிவு
இருப்பினும் நகர்ப்புற மக்களுக்கு RO வாட்டரை குடிப்பதை தவிர வேறுவழியில்லை.அப்படி இருக்கையில் நாம் வாங்கும் RO வாட்டர் தரமானதா என்று சில விஷயங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முதலில் கேன் வாட்டரில் ஒட்டப்பட்டிற்கும் ஸ்டிக்கரை கவனிக்க வேண்டும்.அதில் காலாவதி தேதியை பரிசோதிக்க வேண்டும்.அடுத்து fssai,ISI சீல் மற்றும் லைசன்ஸ் நம்பர் போன்றவை இருக்கிறதா என்பதை செக் செய்ய வாங்க வேண்டும்.