இருமொழிக் கொள்கைதான் தமிழகத்திற்கு தேவை என்றும் மும்மொழிக் கொள்கை என்பது ஒருபொழுதும் தமிழகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டம் என்றும் தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது இது குறித்து பிரபல பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்கள் youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.
தராசு ஷியாம் அவர்கள் அதில் தெரிவித்திருப்பதாவது :-
1959 ஆம் ஆண்டு நேரு அவர்கள் ஹிந்தியினை பேச விரும்பாத மாநிலங்கள் அனைத்திற்கும் அலுவல் மொழி மட்டுமே போதும் என தெரிவித்தார் என்றும் அதனைத் தொடர்ந்து 1965இல் முதல் முறையாக இந்தி திணிப்பு மிகப்பெரிய அளவில் போராட்டமாக உருவெடுத்தது என்றும் தெரிவித்தவர், அதற்கு முன்பாகவே பலமுறை இந்தி திணிப்பிற்காக பல போராட்டங்கள் நடைபெற்றது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் நடைபெறக்கூடிய இந்த மொழிப்போரில் தான் மாநில அரசுக்கு தான் துணை நிற்பேன் என்றும் அதற்கு காரணமாக, இங்கு ஹிந்தி மொழி விருப்பமொழியாக அல்லாமல் ஒரு வித திணிப்பாகவே உள்ளது என்றும் ஹிந்தி மொழியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே கல்வி நிதி கொடுப்போம் என்பது பிளாக்மெயில் அரசியல் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், இந்தியாவானது பல மொழிகளை கொண்ட நாடாக விளங்கும் தருணத்தில் இங்கு ஹிந்தி மொழியை பரப்புவது என்பது முறைகேடான செயல் என்றும், இவ்வாறு ஹிந்தி மொழியை பரப்புவதன் மூலம் ஹிந்தியின் ஆதிக்கத்தை அதிகரித்து மற்ற மொழிகளின் ஆதிக்கம் மட்டும் இல்லாது அதனை அடியோடு அழிப்பதற்கான செயல் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு அவர் தெரிவித்த உதாரணம் பின்வருமாறு, தற்பொழுது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது என்றால் அந்த குடியிருப்பில் தமிழர்கள் மற்றும் ஹிந்தி என பிற மொழிக்காரர்கள் வசிக்கக் கூடிய இடத்தில் ஹிந்தி மொழி பேசுபவர்கள் மட்டுமே இங்கு வசிக்க வேண்டும் எனக் கூறுவது ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அனைத்து மொழிகளையும் மதித்து நடக்கக்கூடியது என்றால் அங்கு மொழிப்போர் இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.