இன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 1000 முதல்வர் மருந்தகங்களை மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார். இதன் மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் மத்திய அரசு வழங்கக்கூடிய மாத்திரைகளின் விலையை விட எந்த விதத்தில் மாநில அரசினுடைய இந்த மருந்தகங்களில் உள்ள மருந்துகள் விலை வித்தியாசங்கள் உள்ளன என்பது குறித்த பல விஷயங்களை திமுக எம்எல்ஏ மற்றும் மருத்துவரான எழிலன் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.
திமுக எம்எல்ஏ மற்றும் மருத்துவரான எழிலன் அவர்கள் தெரு, திமுக எம்எல்ஏ மற்றும் மருத்துவரான எழிலன் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் இன்று முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன என்றும் மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு பொருளாதார ஏற்றத்தால் பாதிக்கப்படுவதாகவும் இந்த முதல்வர் மருந்தகங்கள் அமைப்பதன் மூலம் மருத்துவ செலவுகளை குறைக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார். ரத்த கொதிப்பு இருதய பலவீனம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் அவர்களுடைய பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகிறது என தெரிவித்தவர் என்ன முதல்வர் மருந்தகத்தின் மூலம் அதற்கான நிவாரணம் கிடைக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த மருந்தகங்களின் மூலம் தொழில் முனைவோருக்கு ஒரு புறம் சாதகமாகவும் மற்றொருபுறம் ஏழை எளிய மக்களுக்கு சாதகமாகவும் அமைந்திருக்கிறது என்றும் இதனால் 75 சதவிகிதம் முதல் 50 சதவீதம் வரை மருந்துகள் வாங்குவது சேமிக்கலாம் என்றும் தெரிவித்ததோடு சர்க்கரை நோய்க்கான METFORMIN மாத்திரைகள் தனியாரில் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும் மத்திய அரசின் பிஎம்பிஜேகே மருந்தகங்களில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும் தெரிவித்தவர் முதல்வர் மருந்தகங்களில் 11 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.