சீர்காழியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரான முத்தரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசானது சர்வாதிகாரியாக செயல்பட முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-
மத்திய அரசானது சர்வாதிகார அரசாக செயல்பட நினைப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது ஆனால் அதற்குரிய நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசாணை தர மறுக்கிறது என்றும் 3 மாதங்களாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் விவசாய தொழிலாளர்கள் பட்டினி கிடக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் பொழுது தமிழகத்திற்கு மட்டும் ஏன் நிதி ஒதுக்கவில்லை என்றும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதியானது வழங்கப்படும் எனக் கூறி 2,152 கோடி ரூபாயை கொடுக்காமல் பிளாக் மெயில் செய்வது ஜனநாயக நாட்டில் நடைபெறக்கூடிய செயல் அல்ல என தெரிவித்திருக்கிறார்.
1937 மற்றும் 1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டம் நடத்தியதை போன்று மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு மத்திய அரசாணது நெருக்கடி கொடுப்பதாகவும் மத்திய கல்வி மந்திரி கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் என்று கூறிவிட்டு தமிழக அரசு மீது பழியை சுமத்தி அவர் தப்பிக்க நினைப்பது வெற்றி ஆகாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது என்றும் அதனை மும்மொழியாக மாற்ற நினைப்பது எந்த விதத்திலும் சரியல்ல என்றும் சாடுகிறார்.