என்கிட்ட சரசம் பண்றதுக்குனே நீங்க பிறந்து இருக்கீங்களாடா!! எலான் மஸ்க் குமுறல்!!

எலான் மஸ்கின் ஏஐ தொழில்நுட்பத்தின் விலை காரணமாக சீன நிறுவனம் அதைவிட கம்மியான மானியத்தில் அதே அளவு நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பத்தை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் மஸ்க்கிற்கு சொந்தமாக உள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோளை நிறுவி, அதன் வழியாக நல்ல இணைய சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இப்பொழுது அதையும் முறியடிக்கும் விதமாக சீன நிறுவனம் அதிவேக இணைய தளத்திற்கு தேவையான வேலையில் ஈடுபட்டு வருகின்றது.

ஏற்கனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் தொழில்நுட்பம் தொடர்பாக பல போட்டிகள் நடந்து வருகின்றன. சீன அரசும் அமெரிக்காவை நம் தொழில்நுட்பம் மிஞ்ச வேண்டும் என்பதற்காக முழு முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்களை ஊக்குவித்து வருகிறது. சீனாவின் ஸ்பேஸ்செயில் நிறுவனம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை முறியடிக்கும் நோக்கில் தற்சமயம் களம் கண்டு வருகின்றது. ஸ்டார்லிங்க் நிறுவனம் புவி சுற்றுவட்டப் பாதையில் 2000 கிலோ மீட்டருக்கு குறைவான பகுதிகளில் புவியை சுற்றிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் போர் நடக்கும் இடங்களில் கூட இந்த நிறுவனத்தால் அதிவேக இணையத்தை பயன்படுத்த முடியும். இந்நிலையில் ஸ்டார்லிங்க் நிறுவன வெற்றி முறியடிக்கும் நோக்கில் சீன நிறுவனம் பணியை தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல தொழில்நுட்பங்களை சீன நிறுவனம் வழங்கி அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை அகில நாடுகளில் செயலற்று போகச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இதிலும் இவர்கள் பணி சிறக்கும் என்றே பல வல்லுனர்கள் கூறுகின்றனர்.