உங்கள் குழந்தை மூக்கடைப்பு பிரச்சனையால் கஷ்டப்படுறாங்களா? சூடான நீரில் இந்த எண்ணெய் விட்டு ஆவிபிடிக்க வையுங்க சளி கரைந்திடும்!!

Photo of author

By Divya

உங்கள் குழந்தை மூக்கடைப்பு பிரச்சனையால் கஷ்டப்படுறாங்களா? சூடான நீரில் இந்த எண்ணெய் விட்டு ஆவிபிடிக்க வையுங்க சளி கரைந்திடும்!!

Divya

பருவநிலை மாற்றம்,கிருமி தொற்று காரணமாக குழந்தைகளுக்கு அடிக்கடி சளி,இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதில் மூக்கடைப்பு பிரச்சனையால் மூச்சு விடுவதில் சிரமம்,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அவர்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகளை பின்பற்றலாம்.

தீர்வு 01:

1)தண்ணீர் – ஒரு கப்
2)யூக்கலிப்டஸ் ஆயில் – மூன்று துளிகள்

பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி ஆவி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திற்கு ஊற்றி மூன்று துளிகள் யூக்கலிப்டஸ் எண்ணெய் சேர்த்து ஆவிபிடிக்க வைக்க வேண்டும்.இப்படி செய்தால் சுவாசப் பாதையில் உள்ள கெட்டி சளி கரைந்து வெளியேறிவிடும்.

தீர்வு 02:

1)கடுகு எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)பூண்டு பற்கள் – இரண்டு

ஒரு தாளிப்பு கரண்டையில் இரண்டு தேக்கரண்டி அளவு கடுகு எண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் இரண்டு பல் பூண்டு பற்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.இரண்டு நிமிடங்கள் வரை குறைவான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர் இந்த எண்ணெயை ஆறவைத்து மூக்கு பகுதியில் அப்ளை செய்து வந்தால் அடைத்துக் கொண்ட சளி இளகி வெளியேறிவிடும்.

தீர்வு 03:

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)காட்டன் துணி – ஒன்று

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்த வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை இறக்கி வைக்க வேண்டும்.பிறகு ஒரு காட்டன் துணியை இந்த தண்ணீரில் போட்டு பிழிந்து மூக்கு பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தால் அடைபட்ட சளி கரைந்து வெளியேறிவிடும்.

தீர்வு 03:

1)தண்ணீர் – ஒரு கப்
2)கற்பூரம் – ஒன்று
3)இலவங்கம் – இரண்டு
4)துளசி இலைகள் – இரண்டு தேக்கரண்டி

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் இரண்டு இலவங்கம் மற்றும் இரண்டு தேக்கரண்டி துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு கற்பூரம் சேர்த்து ஆவி பிடித்தால் மூக்கடைப்பு பிரச்சனை குணமாகும்.

தீர்வு 04:

1)வேப்பிலை – இரண்டு கொத்து
2)தண்ணீர் – ஒரு கப்

பாத்திரம் ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும்.அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

பிறகு அதில் இரண்டு கொத்து வேப்பிலை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இந்த தண்ணீர் கொண்டு ஆவிபிடித்தால் மூக்கடைப்பு குணமாகும்.