இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ஒயின் ஷாப் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

Photo of author

By Gayathri

இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ஒயின் ஷாப் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

Gayathri

wine-shop-holiday-for-3-days-from-today-wine-lovers-in-shock

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெலுங்கானா சட்ட மேலவையில் ஆசிரியர்கள் மட்டும் பட்டதாரிகள் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதால் ஒயின்ஷாப் மற்றும் பார்களையும் பிப்ரவரி 25 முதல் 27 வரை மூட உத்தரவு வந்த நிலையில் மது பிரியர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சைபராபாத் போலீஸ் கமிஷ்னரேட்டில் உள்ள ஆர்.சி.புரம் , கொல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் , கிளப்புகள் உணவகங்களுடன் இணைக்கப்பட்ட பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்படும் என சைபராபாத் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது அங்குள்ள மது பிரியர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன்படி, இன்று மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை என தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து விதமான ஒயின் ஷாப்புகள் பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் அனைத்தும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மூடப்படும் என தெலுங்கானா சைபராபாத் காவல் துறையினர் அறிவித்துள்ளனர் இதனால் மது பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மது கடைகள் மூடப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா மாநிலத்தின் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.