2025 – 26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் ஆனது மார்ச் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலைகள் அதற்கான அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கிறது. இதில் மகளிர் உரிமை தொகையை குறித்த முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பட்ஜெட் துறை சார்ந்த முடிவுகள் மற்றும் மக்களுக்கான புதிய அறிவிப்புகள் என அனைத்து முடிவுகளும் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், ஏற்கனவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தது போன்று 3 மாதங்களில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மகளிர் தொகையின் தாயகமாக இருக்கக்கூடிய தமிழகத்தில் 1000 ரூபாய் மட்டுமே வழங்கக்கூடிய நிலையில், இதனை பின்பற்றக்கூடிய மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் 1500 ரூபாய் , பஞ்சாப் மாநிலத்தில் 1200 ரூபாய் வழங்கப்படுவதோடு டெல்லிக்கு 2500 ரூபாய் வழங்க இருப்பதாக பாஜக தேர்தல் வாக்குறுதியை அறிவித்திருக்கிறது. இதனால் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை உயர்த்துவதற்கான முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன.
அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படுவதோடு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த இரண்டு முடிவுகளும் மிக முக்கியமான முடிவுகள் ஆக இருக்கும் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு இதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்