நாம் தமிழர் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் மட்டுமல்லாது மாவட்ட செயலாளர்கள் வரை பலரும் கட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாகவும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்றும் இருந்த போதிலும் தன்னுடைய தமிழ் தேசியத்தை விதைக்கும் பாதையானது பயணமாக தொடரும் என காளியம்மாள் தெரிவித்திருக்கிறார்.
தற்பொழுது நாம் தமிழர் கட்சியில் நிகழக்கூடிய கட்சிப் பிளவானது வேர் முதல் மரத்தின் உச்சி வரை என மாவட்ட செயலாளர்கள் முதல் கட்சியினுடைய முக்கிய தலைவர்கள் வரை இந்த கட்சியில் இருந்து விலகிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியிலிருந்து பலரும் பிரிந்து சென்று திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் சேர்ந்தது நாம் தமிழர் கட்சியை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியதோடு இந்த கட்சியின் அஸ்திவாரத்தை பிளந்தது. அதேபோன்று சம்பவம் மீண்டும் தற்பொழுது நிகழ்ந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது கட்சிப் பிளவு ஏற்பட்டதற்கு சீமான் தான் முக்கிய காரணம் என வெளிப்படையாக தெரியும் வகையில் அவர் நடந்து கொள்கிறார். ஏனெனில் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகும் பொழுதிலிருந்து மாவட்டச் செயலாளர்கள் விலகும் பொழுதும் யாரையும் தடுக்கவோ அல்லது யாரிடமும் எதனால் விலகுகிறீர்கள் என்ற காரணத்தை கேட்கவோ அவர் தயாராக இல்லை. அதற்கு மாறாக யாரை நம்பியும் தன்னுடைய கட்சி இல்லை என திமிராக தெரிவிப்பதே காரணமாக அமைந்திருக்கிறது.
இது மட்டுமின்றி, சீமான் தன்னுடைய கட்சியில் உள்ள தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்காமல் இருந்ததோடு உங்கள் யாருக்காகவும் மக்கள் ஓட்டு போடவில்லை என்றும் எனக்காக மட்டுமே நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுகள் கிடைக்கின்றது என்றும் தெரிவித்திருப்பது அனைவரையும் கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் கட்சியில் இருக்கலாம் என்றும் விருப்பமில்லாதவர்கள் கட்சியை விட்டு உடனே விலகிக் கொள்ளுமாறும் பேசி இருப்பது கட்சிக்காக இத்தனை நாள் பணியாற்றிய அனைவரையும் இழிவுபடுத்தும் காரியமாக அமைந்திருக்கிறது. இது போன்ற பல முக்கிய காரணங்களுக்காகவே தற்பொழுது நாம் தமிழர் கட்சியானது பிளவுகளை மேற்கொண்டு வருகிறது.