திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இந்த மஞ்சப்பை விருதுகளைப் பெற 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக வளாகங்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தேர்வு செய்யப்பட கூடியவர்களுக்கு முதல் பரிசு 10 லட்சம் ரூபாய் என்றும் இரண்டாவது பரிசு 5 லட்சம் ரூபாய் என்றும் மூன்றாவது பரிசு, 3 லட்சம் ரூபாய் என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
முதன் முதலில் 2022 – 23 ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்ததாகவும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை முழுவதுமாக ஒழிப்பதற்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்களை தவிர்த்து அதற்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பொருட்களை பயன்படுத்துபவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த மஞ்சப்பை விருதானது வழங்கப்பட முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க நினைக்கும் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
https://Dindigul.nic.in/ என்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும் அல்லது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் மே 1 2025 ஆம் தேதி நான் இதற்கான கடைசி தேதி என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த மேலும் தகவல்களை அறிய திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை 805604234 என்ற அலைபேசி எண்ணின் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்திருக்கிறார்.