மத்திய அரசானது நலிபடைந்த தொழிலாளர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. உதவித்தொகையுடன் கூடிய 2 லட்சம் ரூபாய் காண மருத்துவ காப்பீடு இதில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நலிவடைந்த தொழிலாளர்கள் மற்றும் இன்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டு பணியாளர்கள் என அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ ஷ்ரம் திட்டத்தின் கீழ் அட்டை பெற்றுக் கொண்டால் அந்த அட்டையை வைத்து 2 லட்சம் ரூபாய் காண மருத்துவ காப்பீடை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வங்கி கணக்கில் மாதா மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை மத்திய அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :-
இந்த திட்டத்தின் கீழ் பயன்பட நினைப்பவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு மற்றும் ஆதாரில் இணைத்துள்ள அலைபேசி எண் உடன் வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு eshram.gov.in என்ற இணையதள பக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த இணையதளத்தின் மூலம் உங்களால் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால் அதற்கான பிற வழிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகில் இருக்கக்கூடிய இ சேவை மையம் மற்றும் CSC மையங்களுக்கு சென்று தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என்றும் பதிவேற்றிய பின் மத்திய அரசினுடைய பரிசீலனைக்கு பின்னர் மாதம் 1000 ரூபாய் உங்களுடைய வங்கி கணக்கிற்கு வந்தடையும்.