தற்பொழுது அதிக அளவில் சைபர் கிரைம் குற்றவாளிகள் உருவெடுத்து பல வழிகளில் மக்களினுடைய வங்கி கணக்கில் இருந்து பணங்களை கொள்ளையடித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக ஆதார் கார்டு ஆதார் எண் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளைகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பலரும் முக்கியமான இடங்களில் தங்களுடைய ஆதார் எண்களை பகிர்வதற்கு அச்சு படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளை கலைவதற்காக UDAI முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.
UIDAI அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஆதார் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விர்ச்சுவல் ஐடியை வழங்கி வருகிறது. இந்த ஐடி மூலம் ஈ கேஒய்சி முடித்தல் வங்கி கணக்குகளை திறத்தல் மற்றும் அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்க மட்டுமல்லாது இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வாங்குவதற்கும் பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்கவும் இந்த விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறது.
அதாவது ஆதார் எண்களை பயன்படுத்தக்கூடிய அனைத்து இடங்களிலும் ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த விர்ச்சுவல் ஐடியின் 16 இலக்க எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என UIDAI தெரிவித்திருக்கிறது.
விர்ச்சுவல் ஐடி பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் :-
✓ UIDAI இன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைய வேண்டும்.
✓ அதன் பின் விருப்ப மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
✓ ஆதார் சர்வீஸ் என்ற பிரிவின் கீழ் விர்ச்சுவல் ஐடி ஜெனரேட்டர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
✓ அலைபேசி எண் கொடுப்பதன் மூலம் வரக்கூடிய ஓடிபி உள்ளீடு செய்ய வேண்டும்.
✓ உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்து அதன் பின் கேப்சா கோர்ட் மற்றும் மொபைல் நம்பரில் வந்த ஓடிபிஐ உள்ளீடு செய்ய வேண்டும்.
✓ மேல் கூறியவற்றை செய்து முடித்தவுடன் திரையில் உங்களுடைய விரிச்சுவல் ஐடி அதாவது 16 இலக்க எண் தோன்றும், அதனோடு கூடவே உங்களுடைய மொபைலுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக இந்த விர்ச்சுவல் ஐடி அனுப்பப்படும்.