மத்திய அமைச்சகத்தின் 2023 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் மாணவர்களின் விருப்பத்தின் பெயரில் இந்த பொது தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது.
அதாவது வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படக்கூடிய பொது தேர்வில் மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே இரண்டு முறையும் கலந்து கொள்ளலாம் என்றும், இல்லை என்றால் ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ளும்படி இந்த செயல்முறை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பயிலக்கூடிய மாணவர்கள் இந்த இரண்டு தேர்வுகளையும் எழுதுவதன் மூலம் எந்த தேர்வில் மாணவர்களின் உடைய மதிப்பெண் விவரங்கள் அதிகமாக உள்ளதோ அந்த தேர்வினை தங்களுடைய அடுத்த படி நிலைக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என இதில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயல்முறை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
2025 26 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில் இந்த திட்டம் செயல்முறை படுத்தப்படும் என்று தெரிவித்திருப்பது ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் ஒரு சிலருக்கு ஒரு ஆண்டில் எப்படி இரண்டு முறை பொது தேர்வு எழுத முடியும் என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு வரையறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் படி 2025 26 ஆம் ஆண்டுக்கான பொது தேர்வு இரண்டு வாரியத் தேர்வுகளாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த செயல்முறை குறித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுவதற்கு மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சிபிஎஸ்சி பள்ளிகளில் இது போன்ற தேர்வுகளை நடத்துவது குறித்த உங்களுடைய கருத்துக்களை https://cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.