பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது பி எப் பயனாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. அவற்றிற்கான முக்கிய விதி ஒன்றை இந்த அமைப்பு கொண்டு வந்திருக்கிறது.
அதன்படி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல் :-
EPFO பயனாளர்களுக்கு தனித்துவமான மற்றும் நிரந்தர 12 இலக்க எண் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணானது யுனிவர்சல் கணக்கு எண் என அழைக்கப்படுவதோடு ஒரு நபருக்கு கொடுக்கப்படும் ஒரு எண்ணானது அவருடைய வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட யுனிவர்சல் கணக்கு எண் மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அதற்கான காலக்கெடுவு பிப்ரவரி 15ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை வருங்கால வைப்பு நிதி அமைப்பு மார்ச் 15 வரை நீட்டித்திருக்கிறது. இந்த நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவர்கோல் தங்களுடைய யுனிவர்சல் எண் மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்கள் கட்டாயமாக இணைத்து விட வேண்டும் என்றும் இதற்கு மேல் கால அவகாசமானது நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் குறிப்பாக, ஊக்கத்தொகை மற்றும் ELI போன்ற திட்டங்களை பெறுவதற்கு UAN ஆக்டிவேட் செய்தல் மிகவும் அவசியம் என்றும் குறிப்பாக PF தரக்கூடிய தொழிலாளர்களுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் மூலமே திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆதார் எண்ணை இதனோடு அப்டேட் செய்யவில்லை என்றால் கட்டாயமாக பி எப் பயனாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய திட்டங்கள் மற்றும் சலுகைகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.