பட்டா சிட்டா போன்ற ஆவணங்களில் சிறு பிழைகள் காரணமாக திருத்தம் செய்வதற்கு கொடுக்கும் பொழுது அவ்வாறு பிழை திருத்தம் செய்வதற்காக கொடுக்கப்படக்கூடிய பட்டாக்கள் கிடப்பில் போடப்படுவதாகவும் இதனை தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பட்டா மாறுதல் திட்டத்தில் அதிக அளவு கணினி மயமாக செயல்படுவதால் பட்டாவில் சிறு பிழைகள் இருந்தாலும் அதனை கணினி ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கக்கூடிய சிறிய பிள்ளைகளை சரி செய்வதற்காக கொடுக்கும் பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை வேலை பளு காரணமாக கிடப்பில் போட்டு விடுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
வருவாய் கோட்டாட்சியர் களின் இதுபோன்ற செயல்பாடுகளால் பலருடைய பட்டாக்கள் பிழை திருத்தம் செய்யப்படாமல் கிடப்பில் கிடப்பதாகவும் பட்டாப் பிழையை சரி செய்வதற்காக வருவாய் துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவரான பி மணிசங்கர் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மீண்டும் அவர் கோரிக்கை விடுத்திருப்பதில் தெரிவித்திருப்பதாவது :-
ஒரு நிலத்தின் உடைய பரப்பளவு அதன் உரிமையாளரின் பெயர் என அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படக் கூடிய பட்டாக்களில் சின்ன சின்ன பிள்ளைகள் காணப்படுவதாகவும் வருவாய் துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு பிள்ளைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் இது போன்ற பிழைகள் ஏற்படுவதால் தான் அதனை சரி செய்ய மக்கள் தங்களை தேடி வருவார்கள் என்பது போன்ற நோக்கத்துடன் அவர்கள் செயல்படுவதாகவும், அவ்வாறு சரி செய்ய கொடுத்த பட்டாக்களை பெறுவதற்காக மக்கள் வரும்பொழுது அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில் பின்வருமாறு :-
வருவாய் கோட்டாட்சியர்களுக்கு வேலை பளு மற்றும் பட்டக்கலில் ஏற்படக்கூடிய எழுத்துப் பிழைகளை சரி செய்வது போன்ற விஷயங்களில் அதிக அளவு விண்ணப்பங்கள் வருவதால் இரண்டையும் இணைத்து பார்க்கும் பொழுது அவர்களுக்கான வழக்கமான பணிகளுடன் சேர்த்து இவற்றை செய்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் இவற்றை தினமும் பின்பற்றுவதற்கு சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்த வருவாய்த்துறை அதிகாரி, இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் விரைவில் முகாம் அளித்து பட்டாவில் உள்ள பிழைகளை சரி செய்து கொடுப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார்.