75 ரூபாய் மதிப்புள்ள இலவச பெட்ரோலை பிப்ரவரி 28ஆம் தேதி வரை வழங்க இருப்பதாக அரசு எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் அறிவித்திருக்கிறது.
பாரத் பெட்ரோலியம் தன்னுடைய நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியத்தில் 75 ரூபாய் மதிப்புள்ள பெற்றோர்களை இலவசமாக பெறுவதற்கு உங்களிடம் இருசக்கர வாகனம் இருந்தால் மட்டுமே போதும் என்றும் அவ்வாறு இரு சக்கர வாகனத்தில் வரக்கூடியவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2025 பிப்ரவரி 28ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்பட இருப்பதாகவும் பாரத் பெட்ரோலியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியத்தின் டீலர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இந்நிறுவனத்தில் வேலை பார்க்கக் கூடியவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பட முடியாது என்றும் பொதுமக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சலுகையை பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் :-
✓ பெட்ரோல் பம்பில் உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் 1000 ரூபாய் வரை கேஷ் பேக் கடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ பாரத் பெட்ரோலியத்தில் வண்டிக்கு பெட்ரோல் போடுவதோடு ஒரு பாக்கெட் MAK 4T என்ற இன்ஜின் ஆயிலையும் வாங்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
✓ இவ்வாறு எஞ்சின் ஆயில் பாக்கெட்டை வாங்குவதன் மூலம் இலவசமாக 75 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம் என்றும் பெட்ரோல் போடக்கூடிய பயணங்கள் விரும்பினால் இலவசமாக எஞ்சின் வாயிலையும் பெட்ரோல் பங்கிலேயே மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குழுக்கள் முறையில் ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் பெற நினைப்பவர்கள் அங்கு இருக்கக்கூடிய க்யூ ஆர் கோர்டை செலக்ட் செய்வதன் மூலம் பணியாளர்கள் அதை ஸ்கேன் செய்து உங்களுக்கான கேஷ் பேக் கிடைக்கும் பட்சத்தில் ஆயிரம் ரூபாய் வழங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.