தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காவல்துறையினருக்கு குறிப்பாக போலீஸ் கான்ஸ்டபிள் களுக்கு பணி கொடுத்தார் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக 5 வது போலீஸ் கமிஷனை அமைத்தார்.
இந்த போலீஸ் கமிஷனில் சென்னை ஐகோர்ட் மாஜி நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கே.ராதாகிருஷ்ணன் மற்றும் பிரபல மனநல நிபுணர் ராமசுப்ரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியர் நளினி ராவ் போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர். அதிலும் குறிப்பாக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி மகேஷ்குமார் அகர்வால், குழுவின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த 5 வது போலீஸ் கமிஷனர் எடுக்கப்பட இருக்கும் முக்கிய முடிவுகள் பின்வருமாறு :-
✓ ரூ.21,700 ஆக இருக்கக்கூடிய சம்பளமானது ரூ.69,100 ஆக உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ இதுவரை 10 ஆம் வகுப்பு படித்தவர்களை கான்ஸ்டபிளாக தேர்ந்தெடுத்தது போக இனி கான்ஸ்டபிள் ஆக தேர்ந்தெடுக்க கூடியவர்களுக்கு கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ 12 ஆம் வகுப்பு இல்லை என்றால் அதற்கு இணையான எந்த படிப்பாக இருந்தாலும் கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% வாய்ப்பு என்பதை தாண்டி தற்பொழுது 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ பணியின் பொழுது ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை சரி செய்யும் விதமாக அவர்களுக்கான குறிப்பிட்ட கால அளவை ஒதுக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ அந்த கால அளவுகளில் மனநல மருத்துவர் ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ சிகரெட் மற்றும் மது போன்றவற்றை பயன்படுத்தக்கூடிய காவலர்களை அழைத்து அவர்களுக்கான தனி சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் முகாம்கள் வைகறுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.