இது தெரியுமா? இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹார்ட் அட்டாக் ஆல் அதிக பேர் இறக்கிறார்கள்!!

Photo of author

By Divya

இது தெரியுமா? இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹார்ட் அட்டாக் ஆல் அதிக பேர் இறக்கிறார்கள்!!

Divya

இன்று உடலில் வியாதி இருப்பது சாதாரண விஷயமாகிவிட்டது.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் பலரும் நோயுடன் நடமாடி கொண்டிருக்கின்றோம்.முன்பெல்லாம் கொடிய வியாதி என்று சொல்லப்பட்டுள்ள ஹார்அட்டாக்,கேன்சர்,சர்க்கரை போன்றவை அனைவருக்கும் வரும் பொதுவான வியாதியாகிவிட்டது.

இந்தியாவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் இதயம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகளால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.உடல் உழைப்பு இல்லாமை,மோசமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறையால் பலரும் இதய நோய் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

வயதானவர்களை விட இளம் வயதினர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருவதால் எதிர்கால இளம் தலைமுறையினரின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.

மாரடைப்பு அறிகுறிகள்:

1)அதீத உடல் சோர்வு
2)அடிவயிற்று வலி
3)மூச்சுத் திணறல்
4)தூக்கமின்மை
5)அதிக வியர்வை வெளியேறுதல்
6)சீரற்ற இதயத் துடிப்பு
7)முடி உதிர்வு
8)மார்பு பகுதியில் வலி உணர்வு

கோடை காலம் மற்றும் மழை காலத்தை காட்டிலும் குளிர்காலத்தில் தான் மாரடைப்பு அபாயம் அதிகரித்து காணப்படுகிறது.இதய வலி,மார்பு குத்தல்,இரத்த அழுத்தம்,இதய பாரம் போன்ற உணர்வு குளிர்காலத்தில் அதிகளவு ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் நவம்பர்,டிசம்பர்,ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் இதய நோய் பாதிப்பு அதிகரித்து என்று ஆய்வு தகவல் மூலம் தெரிய வந்திருக்கிறது.இந்த குளிர்க்களத்தில் இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பு படிமம் அதாவது கொலஸ்ட்ரால் பிளாக்ஸ் இதயம் முழுவதும் பரவுகிறது.இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது.

அதேபோல் குளிர்காலத்தில் இதயத் துடிப்பு கடிமனாக இருக்கும்.டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் கொழுப்பு,இனிப்பு உணவுகளை அதிகளவு உட்கொள்வதாலும் மாரடைப்பு ஏற்படுகிறது.அது மட்டுமின்றி இந்த மாதத்தில் நம் சொந்தங்களை சந்தித்தல் போன்ற உணர்வுப்பூர்வமாக விஷயங்கள் நடக்கும் பொழுது அதிக சந்தோசம் உண்டாகிறது.இதன் காரணமாகவும் திடீர் மாரடைப்பு வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.