தெரிந்து கொள்ளுங்கள்.. TEA-இல் BISCUT தொட்டு சாப்பிடலாமா? எந்த பிஸ்கட் சாப்பிட ஏற்றது?

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. TEA-இல் BISCUT தொட்டு சாப்பிடலாமா? எந்த பிஸ்கட் சாப்பிட ஏற்றது?

Divya

உங்களில் பலர் காலையில் ஒரு கப் தேநீருடன் தான் அந்நாளையே தொடங்குவீர்கள்.காலை நேரத்தில் டீ குடிப்பதால் சோர்வாக உடல் புத்துணர்வு பெறுகிறது என்ற உணர்வு தோன்றுவதால் தான் பெரும்பாலனோர் இதற்கு அடிமையாக உள்ளனர்.சிலர் தலைவலிக்கும் போதும் பசி எடுக்கும் போது டீ செய்து பருகுகின்றனர்.டீ குடித்தால் தலைவலி விடும்,டீ குடித்தால் பசி அடங்கும் என்பது நம் மக்களின் எண்ணம்.

இதில் சிலருக்கு குடிக்கும் டீயில் பிஸ்கட்,பிரட்,ரஸ்க் போன்றவற்றை டிப் செய்து சாப்பிடுகிறார்கள்.குறிப்பாக பிக்ஸ்ட் இல்லாமல் சிலர் டீ குடிக்கவே மாட்டார்கள்.அந்தளவிற்கு அதன் சுவைக்கு அடிக்ட் ஆகி இருக்கிறார்கள்.

டீயில் பிஸ்கட் முக்கி சாப்பிடுவதால் சுவையாக இருந்தாலும் இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் நிச்சயம் அறிய வேண்டும்.நாம் சாப்பிடும் பிஸ்கட்கள் பெரும்பாலும் மைதா மற்றும் குளூட்டன் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது.அனைத்து பிஸ்கட்களிலும் மாவுச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.அது மட்டுமின்றி பிஸ்கட்களை பேக் செய்வதற்காக பட்டர்,ரீபைண்ட் ஆயில் பயன்படுத்துகிறது.

இந்த பிஸ்கட்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை சீக்கிரம் அதிகரிக்கச் செய்துவிடும்.தொடர்ந்து பிஸ்கட் சாப்பிட்டு வந்தால் உடலில் உயர் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.

அது மட்டுமின்றி கார்டியோ வாஸ்குலர் நோய் ஏற்பட பிஸ்கட் முக்கிய காரணமாக உள்ளது.பிஸ்கட்டில் சேர்க்கப்படும் உப்பு நம் உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும்.அதேபோல் பிஸ்கட்டில் சேர்க்கப்படும் சர்க்கரை உடலில் இரத்த சர்க்கரை அளவு உயர காரணமாக இருக்கிறது.தினமும் பிஸ்கட் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மோசமான பாதிப்பை சந்திக்க நேரிடும்.சிலருக்கு டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிட்டால் வயிற்றுபோக்கு ஏற்படக் கூடும்.

செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.விளம்பரங்களில் காட்டுவது போன்று ஆரோக்கியமான பிஸ்கட் என்று எதுவும் இல்லை.அனைத்து பிஸ்கட்டிலும் மாவுச்சத்து இருக்கிறது.உடல் பருமன்,சர்க்கரை நோய்,கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் பிஸ்கட்டை சாப்பிடக் கூடாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிஸ்கட்டில் எந்த ஒரு ஊட்டச்சத்தும் கிடையாது.கலோரிகள்,மாவுச்சத்து,சோடியம்,கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் மட்டுமே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.