தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலியாக இருக்கக்கூடிய 450 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் போன்ற பணியிடங்களில் சேர நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி மற்றும் சம்பள விவரம் :-
✓ பட்டியல் எழுத்தாளர் :-
இளங்கலை அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க கூடியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் 150 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வயது வரம்பு 32 முதல் 37 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ. 5,285 + 5,087
✓ உதவுபவர் :-
பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க கூடியவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இதில் மொத்தமாக 150 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் வயதுவரம்பு 32 முதல் 37 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சம்பளம் : ரூ. 5,218 + 5,087
✓ காவலர் :-
இந்த பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . மேலும் இந்த பணிக்கும் 150 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான வயதுவரம்பு குறிப்பிடப்படவில்லை.
சம்பளம்: ரூ. 5,218 + 5,087
மதுரையில் இருக்கக்கூடிய நெல் கொள்முதல் நிலையங்களில் இது போன்ற பணிகள் காலியாக இருப்பதாகவும் இதில் சில நினைப்பவர்கள் உள்ளூர் வாசிகளாக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தேர்வு முறையானது நேர்முகத் தேர்வாகத்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :-
முகவரி :-
துணை ஆட்சியர்/ மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், லெவல் 4 பில்டிங், 2வது தளம், BSNL வளாகம், தல்லாகுளம், மதுரை – 625002
என்ற முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கூடிய ஆவணங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.