திடீர்னு கால் நரம்பு இழுத்து பிடிக்குதா? இரவு நேரத்தில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கா? இதற்கான காரணமும் தீர்வும்!!

Photo of author

By Divya

திடீர்னு கால் நரம்பு இழுத்து பிடிக்குதா? இரவு நேரத்தில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கா? இதற்கான காரணமும் தீர்வும்!!

Divya

உங்களில் பலர் கால் நிரம்பு சுண்டி இழுத்தல் பிரச்சனையை எதிர்கொண்டிருப்பீர்கள்.நடக்கும் பொழுது,எழுந்திருக்கும் பொழுது மற்றும் இரவு நேரத்தில் உறக்கத்தின் போது கால் நரம்புகள் இழுத்துக் கொள்வதால் தாங்கிக் கொள்ள முடியாத வலியை அனுபவிக்க நேரிடுகிறது.

கால் நரம்பு சுண்டி இழுத்தல் பிரச்சனையை யாருக்கு ஏற்படும்?

வயதானவர்களுக்கு அதிகம் வருகிறது

ஒட்டப்பந்தைய வீரர்களுக்கு கால் நரம்பு சுண்டி இழுத்தல் ஏற்படலாம்

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் இருபவர்களுக்கு இந்த பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது.

வைட்டமின் குறைபாடு இருபவர்களுக்கு கால் நரம்புகள் சுண்டி இழுத்தல் பிரச்சனை ஏற்படலாம்.

கால் நரம்பு இழுத்து பிடிக்கும் பிரச்சனையை அடிக்கடி சந்திப்பவர்கள் உணவின் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

கால் நரம்பு இழுத்து பிடிக்க காரணமான உணவுகள்:

வாழைக்காய்,உருளைக்கிழங்கு,வேர்கடலை,காராமணி போன்ற வாயுக்களை அதிகப்படுத்தும் உணவுகளை உட்கொள்ளுதல்.

மொச்சை கொட்டை,கொண்டைக் கடலை,பச்சை பயறு போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுதல்.குளிர்ச்சியான நீரை பருகுதல்.

கால் நரம்புகள் இழுத்து பிடிக்க காரணம்:

**தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருத்தல்

**மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைத்தல்

**குளிர்ந்த நீரில் குளித்தல்

**ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்

**அதிக காரம் மற்றும் துவர்ப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்

**இடுப்பை வளைத்து உட்காருதல்

**குளிர்ந்த தரையில் தரையில் இடுப்பு பகுதி படும்படி அமர்தல்

நீங்கள் இந்த பிரச்சனையை அனுபவித்து வந்தால் அதற்கு வீட்டு வைத்தியம் மூலம் தீர்வு காணலாம்.வாயு சம்மந்தபட்ட பிரச்சனைகள் தான் இந்த கால் நரம்பு இழுக்க காரணமாகும்.எனவே சிறிதளவு விளக்கெண்ணையை நாக்கில் படும்படி வைத்து வெது வெதுப்பான தண்ணீர் குடித்தால் வாயுத் தொல்லை ஏற்படுவது கட்டுப்படும்.

கால் நரம்பு சுண்டி இழுத்தல் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

இளநீர் குடித்தல்
வாழைப்பழம் சாப்பிடுதல்
ஆரஞ்சு ஜூஸ் போன்ற கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதேபோல் இந்த பாதிப்பில் இருந்த மீள வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு கால் பாதங்கள் மீது அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.