மனிதர்களின் உடல் இயக்கத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அத்தியாவசியமான ஒன்றாகும்.இந்த ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றில் இருந்து அதிகளவு கிடைக்கிறது.
வைட்டமின்கள் பயன்கள்:
உடல் எலும்புகளை உறுதியாக்குதல்
உடலில் ஏற்படும் காயங்களை சீக்கிரம் குணமாக்குதல்
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
கண் பார்வையை அதிகரித்தல்
உடல் தசைகளை வலிமைப்படுத்துதல்
உடலுக்கு இத்தனை நன்மைகளை வழங்கும் வைட்டமின்கள் உடலில் குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் ஏ குறைபாடு:
இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் கண் பார்வை கோளாறு ஏற்படும்.கர்ப்ப காலத்தில் பெண்கள் பலர் இந்த பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
வைட்டமின் பி குறைபாடு:
உடல் தசை வலி,உடல்’சோர்வு,எடை இழப்பு,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் வைட்டமின் பி குறைபாட்டால் ஏற்படுகிறது.
வைட்டமின் சி குறைபாடு:
ஈறுகளில் இரத்த கசிவு,தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படுகிறது.
வைட்டமின் டி குறைபாடு:
எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இந்த வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுகிறது.வைட்டமின் டி குறைபாட்டால் பற்சிதைவு உண்டாக வாய்ப்பிருக்கிறது.
வைட்டமின் கே குறைபாடு:
இரத்தம் உறைதலுக்கு வைட்டமின் கே அவசியமான ஒன்றாகும்.இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் இரத்தப் போக்கு பிரச்சனை உண்டாகும்.
வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கும் உணவுகள்:
1)தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்த வேண்டும்.பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
2)ஆரஞ்சு பழம்,உருளைக்கிழங்கு போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.கேரட்,வலுவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
3)முழு தானிய உணவுகள்,இறைச்சி மற்றும் மீன் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஓட்ஸ்,தக்காளி,இனிப்பு உருளைக்கிழங்கை உட்கொள்ள வேண்டும்.