பெண்களின் உடலில் உள்ள கருப்பையின் வாயில் புற்றுநோய் கட்டிகள் உருவாவதை கருப்பை வாய் புற்றுநோய் என்று அழைக்கிறார்கள்.கருப்பை வாய்ப் புற்றுநோய் HPV என்ற வைரஸ் தோற்றால் தான் ஏற்படுகிறது.இந்த புற்றுநோய் ஸ்குமமஸ் செல் கார்சினோமா மற்றும் காளப்புற்றுநோய் என்று இரு வகைகளை கொண்டுள்ளது.
கருப்பை வாய்ப் புற்றுநோய் அறிகுறிகள்:
1)மாதவிடாய் கோளாறு
2)சிறுநீர் கழிப்பதில் சிரமம்
3)மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு வெளியேறுதல்
4)இடுப்பு பகுதியில் கடுமையான வலி உணர்வு
5)உடலுறவின் போது இரத்தப்போக்கு ஏற்படுதல்
கருப்பை வாய்ப் புற்றுநோய் வரக் காரணங்கள்:
1)பாலியல் ரீதியான பிரச்சனை
2)நோய் எதிர்ப்பு குறைபாடு
3)பலமுறை உடலுறவு
4)பரம்பரைத் தன்மை
5)உடல் பருமன்
6)கர்ப்ப கால பிரச்சனை
யாருக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது?
30 முதல் 35 வயதுடைய பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பிருக்கிறது.சிறு வயதில் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது.அதேபோல் பல குழந்தைகள் பெற்றெடுப்பவர்களுக்கு இந்த கருப்பை வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது.
பல வருடங்களாக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பிருக்கிறது.
கருப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய்ப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அதேபோல் HPV தடுப்பூசி மூலம் இந்த கருப்பை வாய்ப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம்.
உடலுறவின் போது ஆணுறைகளை பயன்படுத்துதல்,புகைப்பழக்கத்தை கைவிடல் போன்ற செயல்கள் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்ப முடியும்.
குழந்தை பெற்ற பெண்கள் மற்றும் பலமுறை உடலுறவு கொள்ளும் பெண்கள் கருப்பை வாய்ப் பரிசோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.அதேபோல் உடலுறவின் போது சரியான சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.