ஆண்மையை காக்கும் பாதாம் பிசின்!! இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

Photo of author

By Divya

ஆண்மையை காக்கும் பாதாம் பிசின்!! இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

Divya

நமது சரும ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உலர் விதையான பாதாம் பருப்பில் நல்ல ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளன.நாம் பாதாம் பருப்பை ஊறவைத்து அல்லது பொடித்து சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றோம்.ஆனால் பாதாம் பருப்பை விட அதன் மரத்தில் இருந்து கிடைக்கும் பிசினில் தான் எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

பாதாம் பிசின் ஊட்டச்சத்துக்கள்:

*இரும்பு
*மெக்னீசியம்
*கால்சியம்
*சோடியம்
*பொட்டாசியம்

பாதாம் பிசின் நன்மைகள்:

1.இந்த பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

2.வயிற்றுப்புண்,அல்சர்,வயிறு எரிச்சல் இருப்பவர்கள் தேங்காய் பாலில் பாதாம் பிசின் பொடி சேர்த்து குடிக்கலாம்.

3.பாதாம் பிசினில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.

4.பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலியை கட்டுப்படுத்த பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிடலாம்.

5.உடல் சூடு தணிய ஊறவைத்த பாதாம் பிசினை உட்கொள்ள வேண்டும்.முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு பாதாம் பிசின் தீர்வாக திகழ்கிறது.

6.செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் பிரச்சனை குணமாக பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிடலாம்.

7.இதில் உள்ள கால்சியம் சத்து மூட்டுகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைய பாதாம் பிசினை தினசரி உட்கொள்ளலாம்.

8ஆண்களின் விந்து தரத்தை அதிகரிக்க பாதாம் பிசின் பெரிதும் உதவுகிறது.உடல் சூட்டால் விந்தணு குறைபாட்டை ஆண்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.அப்படி இருக்கையில் இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாக பாதாம் பிசினை தினமும் சாப்பிட வேண்டும்.

பாதாம் பிசின் பயன்படுத்தும் முறை:

முதலில் நாட்டு மருந்து கடை அல்லது சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் பாதாம் பிசினை வாங்கிக் கொள்ள வேண்டும்.

இதில் தங்களுக்கு தேவையான அளவு பாதாம் பிசின் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைத்து சாப்பிட வேண்டும்.இந்த பாதாம் பிசினை பால்,தேங்காய் பாலுடன் சேர்த்து பருகினால் சுவையாக இருக்கும்.