சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கச்சா எண்ணெய்யினுடைய விலைக்கேற்றவாறு சர்வதேச சந்தையில் ஏற்படும் நிலவர மாற்றங்களுக்கு பொருந்தும் வகையில் இங்கு பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படக்கூடிய சிலிண்டர்களின் விலை குறைந்து, அதாவது 19 ரூபாய் வரை வணிக பயன்பாட்டினுடைய சிலிண்டர் விலை குறைந்த வணிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக அது அமைந்தது. அதேசமயம் வீட்டு பயன்பாட்டினுடைய சிலிண்டர்களின் விலையில் பெரிதளவில் எந்த வித மாற்றமும் நிகழவில்லை.
இந்த மாதம் மார்ச் 1 ஆம் தேதி இன்று துவங்கிய நிலையில் சிலிண்டர் விலையானது உயர்த்தப்பட்டிருக்கிறது. ரூ.5.50 என சென்னையில் வணிக பயன்பாட்டினுடைய சிலிண்டர்களின் விலை உயர்ந்து தற்பொழுது 1965 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது வணிகர்களுக்கு கவலையை அளிக்கக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது.
எனினும் வீட்டு சமையல் எரிவாயுவான சிலிண்டர்களின் விலையில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லாமல் பழைய விலை படியே விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளை நிம்மதி அடைய செய்திருக்கிறது