முறைகேடான முறையில் குடியேறியவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இறக்கிய வேருக்கு அழுவோம் வெற்றிகரமாக அதனை செயல்படுத்தியும் கொண்டிருக்கக்கூடிய நிலையில் அடுத்த அதிரடியான முடிவை டொனால்ட் டிரம்ப் அவர்கள் மேற்கொண்டு இருக்கிறார்.
அதாவது அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மாடர்ன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய இந்தியர் மற்றும் பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் இங்கு கிடைக்க கூடிய வேலைகளை வேண்டாம் என கூறிவிட்டு தங்களுடைய சொந்த நாடுகளுக்கு சென்று அதிக அளவில் பணம் சம்பாதிப்பதாகவும் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்த டொனால்ட் டிரம்ப் அவர்கள், அமெரிக்க குடியுரிமையை கண்டு இவர்கள் பயந்து தங்களுடைய நாடுகளுக்கு சென்று விடுகின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு நடப்பது தங்களுடைய நாட்டிற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் இவர்களுக்காகத்தான் கோல்ட் கார்டு என்று திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது மற்றும் அமெரிக்காவில் இருந்து தொழில் தொடங்கி பணம் சம்பாதிப்பது போன்ற விஷயங்களுக்காக இவற்றை உருவாக்கிய பொழுதும் பெரிதளவில் இந்த கோல்ட் கார்டு திட்டத்தை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என தெரிவித்ததோடு, இந்த திட்டத்தில் சேர்ந்து மற்ற நாட்டவர் பயன்பெற வேண்டும் என்றும் தங்களுடைய நாடு இதனால் வளர வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய நாட்டிற்காக சுயநலமாக யோசிக்க கூடிய டிரம்ப் அவர்கள் இந்த கோல்டன் கார்டை பெறுவதற்கு 5 மில்லியன் டாலர்களை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதாவது இந்திய மதிப்பின்படி 43.59 கோடி ரூபாய் செலவு செய்தால் அவர்களுக்கு இந்த கோல்ட் கார்டு கிடைக்குமென்றும் இதன் மூலம் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருப்பது இந்தியர்கள் அல்லது மற்ற நாட்டவரையும் அதிர்ச்சி கொள்ளாக்கி இருக்கிறது.
ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்வதற்கு இவ்வளவு அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்றால் அதனை கண்டு மக்கள் பயப்படவே செய்வர். இதனால்தான் அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் உருவாக்கிய கோல்டு கார்டு திட்டமானது மற்ற நாட்டவரை பயமுறுத்துவதாக உள்ளதே தவிர அதை பெற்று பயன்பெற யாராலும் நினைக்க முடியவில்லை.