தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய mallow technologies என்ற பிரபல நிறுவனமானது தன்னுடைய கிளைகளான கோவை மற்றும் கரூரில் ஜூனியர் டெவலப்பர் பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இந்த காலி பணியிடத்திற்கான இன்டர்வியூ வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் கூடியவர்கள் தங்களுடைய பட்டப்படிப்புகளில் அரியர் வைத்திருந்தாலும் அல்லது குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு செய்யப்படக்கூடிய நபர்களுக்கு ஆண்டு வருமானமாக 4.2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தகுதிகள் :-
✓ ஏதேனும் ஒரு பிரிவில் இன்ஜினியரிங்
✓ எம்சிஏ
✓ எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்
✓ முன் அனுபவம் தேவையில்லை
✓ 2023 முதல் 2025 வரை கல்லூரி படிப்பை முடித்திருத்தல் வேண்டும்
✓ positive attitude
✓ நியூ டெக்னாலஜிஸ் கற்றுக்கொள்ள ஆர்வம்
✓ பிரச்சினைகளை தீர்க்கும் திறன்
✓ அனாலிடிக்கல் ஸ்கில்ஸ்
✓ ப்ரோக்ராமிங்
✓ டெக்னாலஜி
மேற்கண்ட தகுதிகளுடன் ஜூனியர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாக இந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் கரூர் மற்றும் கோயம்புத்தூரில் பணிக்கு அமர்த்தப்படுவார் என்றும் இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு வருகிற ஏப்ரல் 5 காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்டர்வியூவில் முதல் தகுதி சுற்று மற்றும் அதன் பின் aptitude and coding skills, HR rounds போன்ற முறையில் இன்டர்வியூ அமையும் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.