நமது இரத்தத்தில் உள்ள ஒருவகை கழிவுப் பொருள் தான் யூரிக் அமிலம்.இந்த கழிவுப் பொருள் இரத்தத்தில் இருந்து சிறுநீரகத்திற்கு செல்கிறது.பிறகு சிறுநீர் மூலம் அவை வெளியேறுகிறது.இந்த யூரிக் அமிலம் சிறுநீரகத்தில் அதிகளவு படிந்தால் அவை உடலில் அவை உடலுக்கு ஆபத்தாகிவிடும்.
யூரிக் அமிலம் அறிகுறிகள்:
*சிறுநீரகத்தில் கல் உருவாதல்
*சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படுதல்
*தொடர் மூட்டுவலி
*மூட்டு பகுதியில் வீக்கம் ஏற்படுதல்
*சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்
யூரிக் அமிலம் அதிகரிக்க காரணங்கள்:
*மது பழக்கம்
*உயர் இரத்த அழுத்தம்
*துரித உணவுகள்
*இரத்த சோகை
*வளர்சிதை மாற்ற அறிகுறி
*சோடா
*சிவப்பு இறைச்சி
*அலர்ஜி
யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள்:
*மூட்டு வலி *முதுகு வலி *அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் நிலை *கீல்வாதம் *குமட்டல் *வாந்தி உணர்வு *சிறுநீரக கல்
தேவையான பொருட்கள்:-
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
ஓமத் தூள் – கால் தேக்கரண்டி
கரு மிளகு தூள் – கால் தேக்கரண்டி
தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.அடுப்பில் வாணலி வைத்து சிறிதளவு ஓமம் மற்றும் கருப்பு மிளகு போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.
2.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3.பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு சூடுபடுத்த வேண்டும்.
4.பிறகு இந்த நீரை கிளாஸிற்கு மாற்றி அரைத்த ஓமம் மிளகு பொடியை அதில் போட்டு கலக்க வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டிக்கும் குறைவான அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பருகினால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.அதேபோல் எலுமிச்சை பானம்,ஆப்பிள் சீடர் வினிகர் பானம்,வெந்தய பானம் செய்து பருகினால் உடலில் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.