வாழ்நாள் முழுவதும் கிட்னி ஹெல்தியாக இருக்க.. இந்த 5 பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!

Photo of author

By Divya

வாழ்நாள் முழுவதும் கிட்னி ஹெல்தியாக இருக்க.. இந்த 5 பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!

Divya

நம் உடலில் சிறுநீரகம் தேவையற்ற கழிவுகளை அகற்றும் பணியை செய்கிறது.உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை திரவ வடிவில் வெளியேற்றுகிறது.சிறுநீரகத்தை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் கழிவுகள் குவிந்துவிடும்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அவை கடுமையான வலி மற்றும் சிறுநீர் கழிக்க சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

சிறுநீர் பாதையில் தொற்றுகள் உருவானால் அவை சிறுநீர் கழிக்கும் பொழுது வலி மற்றும் அதிகப்படியான எரிச்சலை ஏற்படுத்தும்.சிலர் சிறுநீரை தகுந்த நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொண்டே இருப்பார்கள்.இப்படி செய்தால் சிறுநீரகம் நாளடைவில் பழுதடைந்துவிடும்.முன்பெல்லாம் வயதானவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது இளம் தலைமுறையினரும் சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்றை அனுபவித்து வருகின்றனர்.

எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் ஹெல்தியான வழிகளை பின்பற்ற வேண்டும்.அந்தவகையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

1)சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு,எலுமிச்சை போன்ற வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாறு பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

2)தர்பூசணி

அதிக தண்ணீர் சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பாதையில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

3)மாதுளை

தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் பருகி வந்தால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

4)திராட்சை

சிவப்பு திராட்சை பழத்தை விதையுடன் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சுத்தமாகும்.

5)ஸ்ட்ராபெர்ரி

சிறுநீரகத்தை சுத்தப்படுத்த ஸ்ட்ராபெர்ரி,ப்ளூபெர்ரி போன்ற பழங்களை சாப்பிடலாம்.அதேபோல் மூலிகை பானம் செய்து பருகி வந்தால் சிறுநீரகத்தில் கழிவுகள் படிவது தடுக்கப்டும்.