O வகை இரத்தம் அனைவருக்கும் கொடுக்க ஏற்றதா? யாருக்கு எந்த இரத்தம் கொடுக்க முடியம்?

Photo of author

By Divya

O வகை இரத்தம் அனைவருக்கும் கொடுக்க ஏற்றதா? யாருக்கு எந்த இரத்தம் கொடுக்க முடியம்?

Divya

தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்பது நமக்கு தெரியும்.அதேபோல் இரத்த வகைகளில் பாசிட்டிவ்,நெகட்டிவ் என இருவகைகள் இருக்கிறது என்பதும் நமக்கு தெரியும்.இந்த உலகில் O+,O-,A+,A-,B+,B-,AB+,AB- என்ற 6 வகை இரத்தம் உள்ளவர்கள் இருக்கின்றனர்.O+ இரத்தம் உள்ளவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர்.இரத்த வகைகளில் O வகை இரத்தம் உள்ளவர்கள் யுனிவர்சல் டோனர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நமது இந்தியாவில் ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் இரத்தம் கொடுக்கலாம்.18 வயது முதல் 65 வயது உள்ள அனைவரும் இரத்த தானம் செய்ய தகுதியானவர்கள் ஆவர்.இரத்த தானம் செய்வோர் குறைந்தபட்ச உடல் எடை 50 ஆக இருக்க வேண்டுமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இரத்த தானத்தை சுலபமாக நம்மால் செய்ய முடியாது.நமது உடலில் இதயத் துடிப்பு,இரத்த அழுத்தம்,இரத்த சர்க்கரை அளவு,ஹீமோ குளோபின் அளவு சீராக இருக்க வேண்டும்.

மது அருந்திவிட்டு இரத்த தானம் செய்ய முடியாது.அதேபோல் சளி,காய்ச்சல் இருப்பவர்கள் 2 நாட்களுக்கு பிறகு இரத்த தானம் செய்யலாம்.

எய்ட்ஸ்,கேன்சர்,இதய நோய்,சர்க்கரை நோய்,பிளேக்,காலரா,டைபாய்டு போன்ற நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

இரத்த வகைகளில் O+ இரத்தம் உள்ளவர்கள் மற்ற அனைத்து வகை இரத்தம் உள்ளவர்களுக்கும் வழங்கலாம் என்பது பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயம்.ஆனால் உண்மையில் எல்லோருக்கும் இவர்களால் ரத்த தானம் செய்ய முடியாது.

யார் யாருக்கு இரத்த தானம் செய்ய முடியும்?

A பாசிட்டிவ் உள்ளவர்கள் அதே வகை இரத்தம் கொண்டவர்கள் மற்றும் AB பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு ரத்த தானம் செய்யலாம்.

A நெகட்டிவ் உள்ளவர்கள் அதே வகை இரத்தம் கொண்டவர்களுக்கும் A பாசிட்டிவ்,AB பாசிட்டிவ் மற்றும் AB நெகட்டிவ் உள்ளவர்களுக்கு ரத்த தானம் செய்யலாம்.

B பாசிட்டிவ் உள்ளவர்கள் அதே வகை இரத்தம் கொண்டவர்கள் மற்றும் AB பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு ரத்த தானம் செய்யலாம்.

B நெகட்டிவ் உள்ளவர்கள் அதே வகை இரத்தம் கொண்டவர்கள் B பாசிட்டிவ்,AB பாசிட்டிவ் மற்றும் AB நெகட்டிவ் உள்ளவர்களுக்கு ரத்த தானம் செய்யலாம்.

AB பாசிட்டிவ் உள்ளவர்கள் அதே வகை இரத்தம் கொண்டவர்களுக்கு ரத்த தானம் செய்யலாம்.

AB நெகட்டிவ் உள்ளவர்கள் அதே வகை இரத்தம் கொண்டவர்கள்,A பாசிட்டிவ்,A நெகட்டிவ் மற்றும் AB பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு ரத்த தானம் செய்யலாம்.

O பாசிட்டிவ் உள்ளவர்கள் அதே வகை இரத்தம் கொண்டவர்கள் A பாசிட்டிவ்,B பாசிட்டிவ்,AB பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு ரத்த தானம் செய்யலாம்.

O நெகட்டிவ் உள்ளவர்கள் அதே வகை இரத்தம் கொண்டவர்கள் மற்றும் மற்ற அனைத்து இரத்த வகை உள்ளவர்களுக்கும் ரத்த தானம் செய்யலாம்.