உங்கள் வெள்ளை பற்களின் சொத்தை விழாமல் இருக்க இந்த டிப்ஸை தொடர்ந்து பாலோ பண்ணுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வெள்ளை பற்களின் சொத்தை விழாமல் இருக்க இந்த டிப்ஸை தொடர்ந்து பாலோ பண்ணுங்கள்!!

Divya

நமது பற்கள் உறுதியாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு உணவையும் கடித்து ருசித்து பார்க்க முடியும்.உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் பல் பாதுகாப்பிற்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.சிலர் நன்றாக சாப்பிட்டு விட்டு வாயை முறையாக சுத்தம் செய்யாமல் இருக்கின்றனர்.

இதனால் பல் இடுக்குகளில் மறைந்திருக்கும் உணவுத்துகளால் பாக்டீரியாக்கள் உருவாகி பற்களை சேதப்படுத்துகிறது.இந்த பல் சொத்தை பாதிப்பு யாருக்கு வேண்டுமானலும் வரலாம்.பற்களில் சொத்தை மற்றும் புழுக்கள் இருந்தால் வாயை திறக்கும் பொழுது கடுமையான துர்நாற்றம் வீசும்.எனவே நம் பற்களில் சொத்தை ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

பற்களை பாதுகாப்பது எப்படி?

1)தினமும் சாப்பிட்டு முடித்த உடன் வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

2)காலை மற்றும் இரவு நேரங்களில் பற்களை துலக்கி சுத்தப்படுத்த வேண்டும்.பல் துலக்கிய பிறகு டங்க் கிளீனர் கொண்டு நாவை சுத்தம் செய்ய வேண்டும்.

3)பற்களை மேலிருந்து கீழாக துலக்க வேண்டும்.சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்த்தால் பல் சொத்தையாவது கட்டுப்படும்.

4)பற்களின் மேல் சொத்தை வரத் தொடங்கினால் நீங்கள் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.இதை உடனடியாக செய்வதன் மூலம் பற்களை பிடுங்காமல் சரிசெய்ய முடியும்.

5)குளிர்ச்சியான மற்றும் சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.இவை பற்சிதைவை ஏற்படுத்திவிடும்.

6)கல் உப்பை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றி கொப்பளித்தால் கிருமித் தொற்று,உணவுத் துகள்கள் வெளியேறிவிடும்.

7)கிராம்பு,பட்டை,வேப்பிலை போன்ற இயற்கை பொருட்களை கொண்டு பற்களை துலக்கினால் பற்களில் கறை படியாமல் இருக்கும்.உப்பு கலந்த பேஸ்டை பயன்படுத்தி வந்தால் பற்களின் வலிமை அதிகரிக்கும்.அதேபோல் பல் மஞ்சள் கறை ஏற்படாமல் இருக்க உணவு உட்கொண்ட பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.